Lord Skanda-Murugan
 

ரொட்டிகளை வீசிய குரங்குகள்

Vallimalai Satchidananda Swamigal
Chithra Moorthy
சித்ரா மூர்த்தி
சென்னை-20

வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் ஒருமுறை தன் வட நாட்டு யாத்திரையின்போது, அயோத்தி சென்று ராமனைத் தரிசனம் செய்தார். வயிற்றுப் பசி மிகுந்த உச்சிப் பொழுதில், ஒரு மரத்தடியில் அமர்ந்து திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். சைவ வைணவ, சமரசக் கொள்கை உடைய திருப்புகழ் பாக்களில் ஆங்காங்கே பல ராமாயணக் குறிப்புகளைக் காணலாம்.

எதேச்சையாக அண்ணாந்து பார்த்தபோது, மரத்தில் சில குரங்குகள் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு 'வஞ்சங் கொண்டும் திட ராவணன்' எனத் துவங்கும் திருப்புகழ்ப் பாடல் நினைவுக்கு வரவே அதை உரக்கப் பாடலானார்.

'ராவணன் போரிட்டபோது குரங்குகள் மிகுந்து நெருப்பைப் போல் கொதித்து எழுந்து கல்குண்டுகளையும் கரடு முரடான மரங்களையும் பேர்த்து எறிந்து....' என்ற பொருள்பட அமைந்த அப்பாடல் வரிகளைப் பாடியபோது, சில குரங்குகள் மரத்தை விட்டு இறங்கி ஓடின. சற்று தூரத்தில் வட இந்தியப் பயணியர் சிலர் சுட்டுக் கொண்டிருந்த ரொட்டிகள் சிலவற்றை எடுத்து வந்து சுவாமிகளிடம் வீசின.

அன்று ராமநவமி தினம்!

இதோ அந்த அழகிய பாடல்..

'வஞ்சங் கொண்டுந் திட ராவண
னும் பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின் பண்புஞ் சரியாமென வெகுசேனை
வந்தம்பும் பொங்கியதாக எ
திர்ந்துந்தன் சம்பிரதாயமும்
வம்புந் தும்பும் பல பேசியும் எதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டை செய்போது கு
ரங்குஞ் துஞ்சுங் கனல் போல வெ
குண்டுங் குன்றுங் கரடார் மர மதும்வீசி
மிண்டுந் துங்கங்களினாலெ த
கர்ந்தங்கம் கம் கர மார்பொடு
மின் சந்துஞ் சிந்த நிசாசரர் வகைசேர
வும் சண்டன் தென்திசை நாடி வி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்கள்
உந்துந்துந் தென்றிடவே தசை நிணமூளை
உண்டும் கண்டும் சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போட உ
யர்ந்தம்புங் கொண்டு வெல் மாதவன் மருகோனே.'