Lord Skanda-Murugan
 

வைகாசி விசாகமும் முருகப் பெருமானும்

வள்ளி - தெய்வானை சமேத முருகன்
வள்ளி - தெய்வானை சமேத முருகன்
வள்ளி முருகன்
வள்ளி முருகன்
குமரர்
குமரர்

சிவானந்தினி துரைசாமி

Original article in English: "Vaikāsi Visākam and Lord Murukan"

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை 'வைகாசி பூர்ணிமா' அல்லது 'வைசாகி பூர்ணிமா' என்று அழைக்கின்றனர். அந்தப் பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம் பிரகாசமாக இருக்கும். வெட்ப பிரதேசமான நம் நாட்டின் ஆகாய வெளியில் வெள்ளியைப் போல மின்மினுக்கும். தன்னுடைய உடலை வெளிக் காட்டியபடி மெல்ல சந்திரன் வெளி வந்து ஆகாயத்தில் உள்ள வெள்ளை மேகங்கள் மீது மெல்லத் தவழும் பொழுது ஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும். இப்படியாக நமக்குப் புரியாத வகையில் இதமான வெளிச்சத்தை வழங்கியபடி வெளி வரும் சந்திரனின் பௌர்ணமி தினம் புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் விஷேமான தினமாகும்.

'விசாகன்' எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 'விசாகம்' என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகின்றது. விசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒரு நுழை வாயிலைப் போலத் தெரிகின்றது. 'வைகாசி'யில் பதினான்காம் நாள் அன்று தோன்றும் அந்த நட்சத்திரத்தன்று சூரியன் பூமத்திய ரேகையைக் கடப்பதினால் அந்த மாதம் முழுவதும் அதிக வெட்பமாக உள்ளது.

வைகாசி விசாக தினம் 'சைவ', 'வைஷ்ணவ', மற்றும் புத்த மதத்தினருக்கும் முக்கியமானது. சைவர்களைப் பொறுத்தவரை 'வைகாசி விசாகம்' என்பது 'முருகன் அவதரித்த தினம்'. வைஷ்ணவர்களுக்கு அது 'பெரியாள்வார் ஜெயந்தி'. மற்றும் புத்த மதத்தினருக்கு அது அற்புதங்கள் நிகழ்த்திய, ஞானம் பெற்ற புத்த மகான் 'மஹாசமாதி' அடைந்த தினம். முருகன் பிறப்பை ஷண்முக அவதாரம் என்கின்றனர். 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' போன்றவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, 'சூரபத்மன்', 'சிங்கமுகன்' மற்றும் 'தாரகன்' என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலை நாட்ட முருகன் அவதரித்த தினம் அது. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலம் பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்டி துதித்து வேண்ட சிவபெருமான் ஆறுமுகனைப் படைத்தார். 'குமாரகுருபரர்' கூறியதைக் கேளுங்கள்:

ஐந்து முகத்தோடோடு முகமும்
தந்து திருமுகங்கள் ஆறாக்கி
Ainthu mukaththodatho mukamum
thanthu Tirumukangal ārāki

திருமூலர் ஆயிரம் ஆண்டுகள் முன் எழுதிய தன்னுடைய திருமந்திரத்தில் அந்த செய்தியை இப்படியாக எழுதினார்:

எம்பிரான் முகமைந்தோடு மருயா
எமே பிறனுக் கதோமுகமருல
Āme pirān mukamainthodu māruya
Rāme pirānuk kathomukamārula

தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறு நெருப்புத் துளிகளை வெளியேற்ற, அது ஜொலித்தவாறு உலகில் வெளி வந்தது. அந்த பொறிகளை 'வாயு'வும் 'அக்னி'யும் கொண்டு போய் 'கங்கை'யில் தள்ள, அது அவற்றை 'சரவணப் பொய்கை'யில் தாமரை மலர்களும் கோரைப் புற்களும் இருந்த இடத்தில் வெளித் தள்ளியது. தாமரையை நல்ல இதயம் போலவும் நாணல் புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருத வேண்டும். அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் 'தாமரை'யும் மற்றும் 'நாணல் புதர்' என அனைத்தும் ஒன்றுடன் ஒண்றிணைந்து உள்ள தத்துவம் விளங்கும்.

ஒருவனின் ஆறு குணங்களான உடல், மூச்சு, மனம், உணர்வு, விவேகம் மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறு முகங்கள்.

ஏரியில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளா மாறி விட, அவற்றை ஆறு கிருத்திகைகள் எடுத்து வளர்த்தன. அந்த ஆறு குழந்தைகளையும் சக்தி தேவி எடுத்து அணைக்க, அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின. அதுவே வைகாசி மாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய ஷண்முக அவதாரம் எனக் கூறப்பட்டது.

'காசியப்ப சிவாச்சாரியார்' எனும் துறவி அது குறித்துக் கூறினார் " உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்டவராகவும், ஆரம்பம் அற்றவராகவும், உருவம் இல்லாத உருவத்துடனும் ஒளி வெள்ளம் போன்ற பிரும்மனாக அவதரித்தார்."

அறுவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றை
பிரும்மமாய் நின்ற ஜோதி பிலம்பதோர் மேனியாக
கருணைக்கோர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டு கொண்டே
ஒரு திருமுருகன் வந்திங்கு உதித்தானாம் உலகம் உய்ய
Aruvamum uruvumāki anāthiyāi palavāi onrāi
Brahmamāi ninra sothi pilambathor meniyākak
Karunaikoor mukhangal ārum karangal pannirendu konde
Oru thiruMurukan vandhāngu udhiththanan ulakam uyya.

மனதாலும், எண்ணங்களினாலும் விவரிக்க முடியாத, ஏன் வேதங்களினாலும் கூட விவரிக்க இயலாத எங்கும் நிறைந்துள்ள சிவம் ஆறு குழந்தைகளாக எழுந்து ஆறு தாமரை இலைகளில் சரவணப் பொய்கையில் மலர்ந்தது என்று கூறினார். முருகனை 'ஷண்முகன்', 'கார்த்திகேயன்', 'குஹன்', 'சரவணப்பன்' மற்றும் 'ஆறுமுகன்' என்றப பெயர்களில் அழைக்கின்றனர். அவர் இயற்கையிலேயே அழகானவர் என்றும், சுப்ரமணியனாக இருப்பவர் என்றும் கூறுவார்கள்.

அவர் சுப்ரமணியனாக அதாவது 'சு-ப்ரமண்யா' அதாவது எதில் இருந்து அனைத்தும் வெளிவந்து முடிவில் அடங்குமோ அந்த பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பவர், எங்கும் நிறைந்து இருப்பவர், மயில் மீது அமர்ந்து இருக்கும் சேனாதிபதி, கையில் ஒரு வேலினை வைத்திருந்தபடி தேவயானை மற்றும் வள்ளியுடன் தோன்றுபவர், அதர்மத்தை நிலை நிறுத்த ஷண்முகனாக வந்தார் என்று கூற வேண்டும்.

அவர் கார்த்திகேகைகளினால் வளர்ந்ததால் கார்த்திகேயனாகவும், ஒவ்ஒருவர் மனதிலும் வசிப்பதால் குஹனாகவும், சரவணை பொய்கையில் இருந்து வந்ததினால் சரவணபவனாகவும், ஆறுமுகங்களைக் கொண்டவராக இருந்ததினால் ஆறுமுகனாகவும் ஆனார். முருகனை சிவப்பானவர் என்ற அர்த்தத்தில் சீயோன் என கூறினாலும் தத்துவ நீதியில் அவர் நீல நிறமானவர் என்றே கூறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் அவர் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெவயானையுடனும் மயிலின் பக்கத்தில் நின்றிருக்க, மயில் தன் அலகில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டு இருப்பது போன்ற காட்சி சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் உள்ள அனைத்திற்கும் ஒவ்ஒரு அர்த்தம் உண்டு. ஆகாயம், மற்றும் பூமியைப் போல எல்லையற்ற நிலையைக் குறிப்பதே நீலநிறம்.

அனைவரின் இருதயக் குகைகளிலும் வசிப்பவன் குஹன் என்ற உண்மையை பிரதிபலிக்கும் தன்மையை குறிக்கும் நிலையை காட்ட அவரவர்களின் உள்ளத்தில் உள்ள ஐம்புலன்களுடன் கூடிய ஆறு (ஷண்) முகமாக காட்சி தருகிறார்.

மயில் 'அழகையும் செருக்கையும்' குறிக்கின்றது. பாம்பு 'தான்' எனும் அகம்பாவத்தை குறிக்கும். ஓவ் ஒரு மனிதனும் உலகத்தில் உள்ள சிற்றின்ப ஆசைகளைத் தேடி ஓடுகின்றனர். 'தான்' என்ற அகம்பாவத்தின் காரணம் 'அறியாமை' என்கின்ற 'அவைத்தியா'. அதை அடக்கி வெற்றி கொண்டு உண்மையைத் தேடிப் போக வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் பாம்பை தன் அலகில் கௌவிக் கொண்டு உள்ள மயில் உருவம் எடுத்துக் காட்டுகின்றது. தீய எண்ணங்களையும், இயலாமையையும் அழித்து விடுவது வேல் என்பதினால் அது விவேகத்தைக் குறிக்கும். விடா முயற்சி, இச்சா சக்தி மற்றும் தூய்மையான அன்பை எடுத்துக் காட்டும் விதமாக வள்ளி காட்சி தர , இறவாமை, கிரியா சக்தி மற்றும் செயல் திறமையையும் வெளிப்படுத்துபவளாக தேவயானை இருக்கின்றாள். ஆக அந்த மூன்று சக்திகளும் ஒண்றிணைந்து அகம்பாவத்தை அழிக்கின்றன (சூரபத்மன் கதைப் போன்ற கருத்துடன்).

Vaikaci Vicākam car festival, Palani
பழனியில் வைகாசி விசாகத் தேர் திருவிழா

அசுரர்களினால் தோன்றிய அதர்மத்தை அழிக்கவும், அந்த குணங்களைக் கொண்ட அசுரர்களை அழிக்கவும் பிறந்த முருகனுடைய நிலையே எடுத்துக் காட்டுவதே கந்தர் சஷ்டி விரதம். தர்மம் அதர்மத்தை வென்றது போல, உண்மை பொய்யை அழித்தது போன்றது ஷண்முகனின் அவதாரம். அதர்மங்களை அழிக்க முயல்பவர்கள் முருகனுடைய உண்மையான பக்தர்கள். அவர்கள் ஷண்முக அம்சத்தைக் கொண்டவர்கள்.

அதனால்தான் என்றும் இளமையானவர், அழகானவர் எனப்படும் முருகன் அந்த செயலை செய்து முடிக்க விசேஷ தினமான வைசாகி விசாகத்தில் அவதரித்தார். அவர் ஒவ்ஒரு பக்தருடைய மனதிலும் நிலையாக இருந்து கொண்டே இருக்கிறார். அதனால்தான் அருணகிரிநாதர் கூறினார்:- இந்த உண்மைகளை எல்லாம் மனதில் ஏந்திக் கொண்டு ஆத்ம பலம் பெற்றிட ஒவ்ஒருவரும் குறைந்தது அரை நிமிடமாவது அனுதினமும் அவரை தியானித்து வந்தால் நிச்சயமாக அவர் அருளைப் பெற முடியும்.'

சரண கமலாலயத்தே அரை நிமிஷ நேரமிட்டில்
தவமுறை தியானம் வைக்க
Sarana kamalalayaththe arai nimisha neramettil
Tavamurai Dhyānam vaikka

புத்தர்களைப் பொறுத்த மட்டில் விசாக் என்பது கௌதம புத்தர் பிறந்து, அறிவு ஒளி பெற்று, மகா சமாதி அடைந்த தினமாகும். அவர் பிறந்தது முதல் கல்வி அறிவு, திருமணம் மற்றும் ஞான ஒளி பெற்றது போன்ற அனைத்து செய்திகளும் அற்புதமானவை. இரண்டாயிரத்து ஐந்தாயிரம் ஆண்டுகள் முன்பே மறைந்து விட்ட அவர் துவக்கி விட்டுச் சென்றுள்ள ஆன்மீகம் இன்னமும் குறையவில்லை. தன்னுடைய சொற்பொழிவுகளில் விவேகானந்தர் கூறுவது உண்டு ' அவதரித்தவர்களில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர் புத்தர். மனித உருவில் அவதரித்த மிகப் பெரிய மனிதர் அவர். உலகிலேயே நல் ஒழுக்கத்தை சிறந்த முறையில் தைரியமாக போதித்தவர். இனியும் அவதரிக்க முடியாத அளவில் உள்ள சிறந்த இந்து மதத்தவர்."

புத்தரின் அவதார காலம் முக்கியமானது. உலகில் போகப் பொருட்கள் மீதான ஆசைகள் மற்றும் துயரங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்க அதில் இருந்து விடுதலை பெற்றிட இறைவனின் கருணையை மக்கள் வேண்டி நின்ற பொழுது புத்தர் அவதரித்தார். வேதங்களும் சாஸ்திரங்களும் நலிவுற்று அழியத் துவங்கிய பொழுது சமுதாயமும் நலிவடைந்தது. தேவையற்ற சடங்குகள் உலகை ஆக்கிரமித்தன. அந்த நேரத்தில்தான் புத்தரை பூமித் தாய் வெளிக் கொண்டு வந்தாள். அவரும் "இனி மதங்கள் தேவை இல்லை. மூடத்தனமாக செய்து கொண்டு இருப்பதை நிறுத்துங்கள்" என்று கூறினார். புத்தர் தக்க நேரத்தில் அவதரித்தரித்து மூடப் பழக்கங்களை ஒழிக்க முனைந்தார். சாவித்திரி என்ற காவியத்தில் அரவிந்தர் எழுதினார் " தாங்க முடியாத கஷ்டங்களே மனிதனுக்கு விழிப்பையை ஏற்படுத்தி சரியான பாதையில் செல்ல வழி காட்டுகின்றது. புத்தர் கூறினார் "ஒரு ஆசிரியர் ஒருவருக்கு சரியான வழியை மட்டுமே காட்ட முடியும். மேற் கொண்டு அதைத் தொடர வேண்டிய பொறுப்பு மனிதர்களுடையதே."

இந்துக்களைப் பொறுத்தவரை புத்த மத கொள்கைகளும் உபநிஷங்கள் போன்றதே. புத்த மதம் எங்கிருந்தோ வந்து முளைத்தது அல்ல. இந்த பூமியில் இருந்தே தோன்றியது. இந்து மதத்தினர் மீண்டும் புத்த மதத்தின் தர்ம முறைகளை ஏற்றுக் கொண்டு அதை இந்து போதனைகளில் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். வைகாசி பூர்ணிமா வைஷ்ணவர்களுக்கு பெரியாள்வார் ஜெயந்தியாகும். அவர் கிருஷ்ணரை குழந்தையாக பாவித்த யசோதாவைப் பற்றியும் பாடியவர்.

ஒவ்ஒரு வருடமும் வைகாசி பௌர்ணமியில் சந்திரன் மேகத்தில் அழகாக உலா வருகின்றது. அந்த நன்நாளில் நம்மால் முடிந்த அளவு அனைவரிடமும் அன்பு செலுத்தி முருகனின் அருளைப் பெறுவோம்.


The Author:

Sivanandini Duraiswamy is a London University graduate who is currently working in the religious, social, cultural and educational fields for girls in Sri Lanka. She currently serves as Consultant at the Ministry of Justice looking after Hindu Affairs in the Integration Programme Unit.

Mrs. Duraiswamy has travelled extensively in the company of her late husband who was a career diplomat. In the course of her travels, she has studied other cultures and made comparative studies of Hindu art, sculpture and architecture with those of other cultures.

E-mail: yogendra@mail.sol.lk

Index of research articles from International Conferences on Skanda-Murukan