![]() |
||||||||||||||||
| ||||||||||||||||
மைலம் முருகன் ஆலயம் புராணக் கதை: அதன் வளர்ச்சிby François L' Hernaultoriginal article in English: "Mailam: A Murukan temple at the crossroads of myth and local culture"
எத்தனைக்கெத்தனை புதிய புதிய ஆலயங்கள் தோன்றுகின்றனவோ அவை அத்துணையும் புராதான ஆலய வரலாற்றுச் சின்னங்களை கண்டு பிடிக்கவும் உதவுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டுகளக்குப் பின் எழுந்துள்ள மைலம் ஆலயத்தின் மூலம் அதன் பின்ணனிக் கதை மற்றும் இதிகாசங்களைப் பற்றியு நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது மட்டும் அல்ல அதன் மூலம் முன்னர் இருந்த பழக்க வழக்கங்களைப் பற்றியும் பின்னர் நிலவிய உள்ளுர் பழக்கங்களையும் அவற்றின் மாற்றங்களினால் கடவுட்களின் சிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியும் ஓரளவு அறிய முடிந்தது திண்டிவனத்தில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது மைலம் ஆலயம். கோரமண்டல் கடற்கரையில், பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பொம்யைப்பாளயம் அருகில் உள்ள சிறிய மலை மீது அந்த ஆலயம் அமைந்து உள்ளது. முதன் முதலாக வீர சைவமடம் அங்குதான் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. பிராம்மணர் என்ற பெயரில் இருந்தே 'பொம்மி' அல்லது 'பொம்மா' என்ற பெயர் வந்தது. ஸ்தல புராணங்களில் 'பொம்மபாளையம்' என்பதை 'பிராமணபுரம்' என்று கூறப்பட்டு இருந்தது. ஏன் எனில் அந்த கிராமம் அந்த காலத்தில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டு இருந்தது. அந்த மடத்தை நோக்கிச் செல்லும் பாதையை அக்ரஹாரம் என்றே இன்னமும் அழைக்கின்றனர். 'ஆனந்தரங்கப் பிள்ளை' என்பவரின் தினக் குறிப்புப் புத்தகத்தில் இருந்து டட்சுக்காரரான 'துப்ளெக்ஸ்' என்பவர் (Dupleix) 1744 ஆம் ஆண்டில் அந்த மடத்தின் மடாதிபதியை சந்தித்து அவருக்கு துணிகளையும் பன்னீர் குப்பிகளையும் தந்து விட்டுச் சென்றதை அறிய முடிந்தது. 1746 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பின் இன்னும் ஒரு தகவலின்படி இருபத்தி நான்கு வருடங்களில் அந்த மடத்தின் தலைவராக மூன்று மடாதிபதிகள் இருந்து உள்ளதாகத் தெரிய வந்துள்ளது . அந்த மடத்தினைக் குறித்து அவர் எழுதி உள்ளவை சுவையானது. முதலில் எழுதிய குறிப்பின்படி பழனியில் துறவியாக இருந்த 'துறையூர் பாச்சிக் கண்டபைய்யூர்' என்பவர்தான் முதலில் அந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றாராம். ஆனால் நான்கு நாட்களுக்குப் பின்னர் எழுதிய குறிப்பில் 'துறையூர் பாச்சிக் கண்டபைய்யூர்' அந்த மடத்தின் தலைமை பொறுப்பேற்கவில்லை எனவும் மாறாக வேறு ஒருவரை நியமிக்கவே அங்கு வந்ததாக அங்கிருந்த தலைமை மடாபதிபதி அவரிடம் கூறினார் எனக் கூறப்பட்டு உள்ளது. அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற பின் துறையூர் திரும்ப விரும்பியதாகவும் கூறி உள்ளார். 'பொம்மயபாளைய' மடாதிபதிகள் அனைவரும் 'சிவன்ன பால சித்தர்கள்' (Śivañāna Bāla Siddha) என்றப் பட்டப் பெயர் பெற்று இருந்தனர். பழனி மலையில்தான் முருகன் துறவி உருவில் பாலக் கடவுளாக இருந்தார். அது சித்தர்கள் வாழ்ந்த இடம். பழனியில் இருந்தவர்கள் அங்கிருந்த மடத்தின் மீது அதிக அளவு கட்டுப்பாடு வைத்து இருந்தனர் எனத் தெரிகின்றது . கதைகள்மைலம் தலபுராணத்தின்படி சிவபெருமானின் கணங்களில் ஒருவரான 'சங்குகணா' என்பவர் 'பார்வதி' குளிக்கும் பொழுது காவல் பணியில் நிற்ப்பவர். ஒருநாள் பார்வதி குளிக்கும் பொழுது அங்கு நுழைந்து விட்ட 'சிவபெருமானை' அவர் கவனிக்கவில்லையாம். அதனால் கோபமுற்ற சிவபெருமான் அதற்குப் பரிகாரமாக சங்குகணா முருகனுடன் சண்டையிட வேண்டி வரும் என்றும் அதன் பின் பல வருடங்கள் 'வேத சைவகமங்களை' போதித்துக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் சாபமிட்டாராம்.
அந்த சாபத்தின் விளைவாக 'சங்குகணா' பால சித்தராக பூமியில் வந்து 'பொம்மயபாளையத்தில்' பிறக்க நேரிட்டது. அவருக்கு முருகன் மூலமே தனக்கு விமோசனம் கிடைக்கும் என்று தெரிந்து இருந்ததினால் நாரதருடைய அறிவுறைப்படி மயிலுடன் சம்மந்தப்பட்ட மலைப் பகுதியான மைலம் செனறார். அங்கு அசுரன் 'சூரபத்மன்' முருகனிடம் இருந்து அருள் பெற்று பாப விமோசனம் பெறுவதற்காக மயிலாகப் பிறந்து இருந்தான். 'தேவசேனையும்', 'வள்ளியும்' எத்தனை வேண்டினாலும் முருகன் 'சங்ககுணாவின்' சாபத்தை விலக்க முன் வரவில்லை. ஏன் எனில் அது சிவபெருமான் இட்ட சாபம் ஆகும். அதனால் அவருடைய இரு மனைவிகளும் 'சித்த கணங்களாக' மாறி சங்ககுணாவின் அரண்மணைக்குள் சென்று ஒளிந்து கொள்ள, முருகன் ஒரு வேடனைப் போல மாறு வேடம் பூண்டு அங்கு சென்று 'சங்ககுணாவுடன்' போரிட நேர்ந்தது. அப்போது 'சங்ககுணா' மாறு வேடத்தில் வந்து இருந்த முருகனை அடையாளம் கண்டு கொண்டு விட முருகனும் அவருடைய சாபத்தை விலக்கினார். அதன் பின் அவரை மைலத்தில் தங்கி இருக்கும்படிக் கூறிச் சென்றார். அங்கேயே முருகனும் 'வள்ளி' மற்றும் 'தேவயானையை' மணந்து கொள்ள 'சங்ககுணாவும்' இனி முருகன் அங்கேயே கல்யாண கோலத்தில் தங்கி இருக்க வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொண்டார். மைலத்தில் பங்குனி அன்று பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. முருகன் தன் மனைவிகளை தேடிச் சென்றது தெய்வீகமே என்றாலும் அதற்கு காரணம் பாலுணர்ச்சியே என்று சிலர் விமர்ச்சிக்கின்றார்கள். நான்காம் நாள் திருவிழாவில் 'திருவாட்டல்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதில் 'வள்ளி' அவளுடைய கணவரான முருகனை சந்திக்க மறுப்பது போன்ற காட்சி வருகின்றது. மற்ற 'சிவன்' ஆலயங்களில் இந்தக் காட்சியில் 'சுந்தரர்' மத்தியஸ்தம் செய்வது போல் இருக்க இந்த ஆலயத்தில் 'பிரும்மா' மத்தியஸ்தம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அங்குள்ள ஸ்தல புராணத்தின்படி 'சங்ககுணா' ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவேதான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தைகள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும். சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன. 'பார்வதியின்' பாதுகாவலனான 'கணபதி' என்ற அசுரனுடன் முருகன் பயங்கரமாகச் சண்டை இட்டப் பின் அவனுக்கு தானே மோட்சம் தந்தார் என்ற நிகழ்ச்சியின் கதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது அந்த ஸ்தல புராணம். சங்ககுணா என்பவர் ஒரு பால சித்தர். புராணக் கதைகள் எப்படி இருந்தாலும் அந்த ஆலயத்தை நிறுவியவர் ஒரு மடத்தின் தலைமை பதவியில் இருந்தவர் என்ற உண்மை தெரிகின்றது. ஸ்தல புராணத்திலும் அந்த செய்தி கூறப்பட்டு உள்ளது. பொம்மயபாளையத்தில் உள்ள மைலத்தில் தான் நிறுவிய மடத்தில் முருகன் கல்யாண கோலத்தில் காட்சி தரவேண்டும் என பாலசித்தர் வேண்டினார். சிற்பங்கள்
ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்சவத்தில் உபயோகிக்கின்றார்கள். அந்த தேரில் பிக்க்ஷாசனா, கஜசம்ஹாரமூர்த்தி, காலான்டகா போன்ற ரூபங்களில் உள்ள சிவபெருமானின் உருவ சிலைகள் செதுக்கப்பட்டு இருக்க சரஸ்வதி, பாமா மற்றும் கிருஷ்ணா போன்ற பிற தெய்வங்களின் உருவ சிலைகளும் செதுக்கப்பட்டு உள்ளன. இவற்றைத் தவிர மற்றொரு பிரிவில் முருகனுடன் சேர்த்து மடமும் மற்றும் மடத்தினை மட்டுமே பிரதிபலிக்கும் சிற்பங்கள் போன்றவையும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்தத் தேரின் இரண்டு தூண்களில் சிலபெருமான் மற்றும் முருகனுடன் சங்ககுணா சண்டை போடுவதை காட்டும் சிற்பங்கள் உள்ளன. அவற்றைத் தவிர சற்று மாறுபட்ட காட்சியாக சிவபெருமான் தலைப்பாகை அணிந்து கொண்டும், தாடியை வைத்துக் கொண்டும் உள்ள நிலையில் பார்வதியுடன் உடலுறவு சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில் சங்ககுணா அங்கு வந்து அவர் கையில் தடியால் அவரை அடித்து, அவரிடம் இருந்து பார்வதியைக் காப்பாற்றுவதற்காக அவள் தலைமயிரை பிடித்து இழுப்பது போல சிற்பம் (படம்-3) உள்ளது. அது போலவே தன் மனைவிகள் இருவரும் இல்லாத முருகன் அவருடன் சண்டை போடத் தயார் என்பதைப் போல தனது கையை மேலே தூக்கிக் காட்டியபடி இருக்க சங்குகுணா மறுபிறப்பு எடுப்பதையும் நாணல் புதரில் பிறந்த குழந்தையை சிவன் கொண்டு போய் பார்வதியிடம் கொடுக்க அவள் அந்த குழந்தைக்கு தன்னுடைய மார்பில் இருந்து பாலுட்டுகின்ற (படம்-4) அந்த காட்சியும் காணப்படுகின்றது.
மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது . அடுத்த பகுதியில் ஆறு முகங்களைக் கொண்ட முருகனை தாமரைப் போன்ற நந்திகேசுவரர் சுமந்து வர அதை சிவபெருமானுடன் உள்ள பார்வதி பெற்றுக் கொள்கின்றாள் (படம்-5). அடுத்ததில் பார்வதியும் நந்திகேசுவரரும் சிவனை வணங்கிக் கொண்டு நிற்க சிவன் தன்னுடைய கரத்தில் முருகனை வைத்தபடி நின்று கொண்டு இருக்கின்றார் (படம்-6)
முற்றிலும் மாறுபட்ட இன்னும் ஒரு அரிய காட்சியில் முருகன் தான் பிறந்த நோக்கத்தை காட்டுவதைப் போல (அதாவது பெற்றோர்களுக்கே உபதேசம் செய்வதைப் போன்ற) அறிவை போதிக்கும் காட்சியில் இருக்க அவர் முன் மடத்தின் தலைமைப் பொறுப்பாளர்களும் காணப்படுகின்றனர். ஒரு தேரில் கணபதியும் மற்ற ஒன்றில் முருகனும் காணப்படுகிறார்கள் . ஒரு காட்சியில் முருகன் தன்னுடைய கையில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி இருக்க அவர் முன்னால் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டு இருக்கும் சிவனுக்கு அதை போதிப்பது போல் இருக்கின்றது ( படம்-7). இன்னும் ஒரு காட்சியில் சிவபெருமான் தன்னுடைய வாயைக் கையினால் பொத்திக் கொண்டு பயபக்தியுடன் நின்று கொண்டு இருக்க ஒரு பீடத்தில் நின்றபடி உள்ள சுப்பிரமணியர் அவருக்கு எதையோ போதிப்பது போல உள்ளது (படம்-8). மூன்றாவதுக் காட்சியில் ஸ்கந்த புராணத்தை குறிக்கும் விதத்தில் வேதங்களை ஓத முடியாமல் போன பிரும்மா பிறப்பது போலக் காட்டப்பட்டு உள்ளது. அவர் முட்களால் சூழப்பட்டிருந்த ஒரு கூட்டில் சிறை வைக்கப்பட்டு உள்ளதும், கையில் கத்தியுடன் தாடி வைத்திருந்த ஒருவர் அங்கு காவலில் இருந்ததையும் காட்டுகின்றது. நடந்து கொண்டு வந்த சுப்ரமணியர் பிரும்மாவை சிறைப் பிடிப்பது போல உள்ளது அந்தக் காட்சி ( படம்-9 ).
ஐந்து சட்டங்களில் வீரசைவ சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றில் ஒரு பீடத்தில் மேல் கட்டப்பட்டுள்ள சிற்ப வேலைபாடமைந்த மண்டபக் கூறையின் கீழ் 'அல்லம்ம பிரபு' என்று தமிழில் செதுக்கப்பட்டு உள்ள உள்ள சிம்மாசனத்தில் ஒருவர் அமர்ந்து உள்ளார். பீடத்தில அமர்ந்து கொண்டு உள்ள (படம்-10) அவர் புன்னிரண்டாம் நூற்றாண்டை சார்ந்த மாபெரும் ஆன்மீகவாதி, பஸவாவிற்கு இணையானவர் என்பதை தெரிவிக்கின்றது . அடுத்த படத்தில் கை கூப்பியபடி நின்று கொண்டு இருக்கும் மூன்று பேர்களும் 'ஆல்லம்ம பிரபுவின்' பக்தர்களாக இருக்க வேண்டும். அவர்களில் நடுவில் உயரமாக உள்ள 'பிரகாசாவின் பிரவேச வேலவா' என்கின்ற அந்த சிற்பம் முக்கியமான நபராக இருந்திருக்க வேண்டும். (படம்-10). மூன்றாம் பகுதியில் உள்ள முதல் சிற்பத்தில் ஒரு துறவி சிற்ப வேலைபாடமைந்த மண்டபக் கூறையின் அடியில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு உள்ளார்.(படம்-11). அவருக்கு தாடி இருக்க அவரது முடியோ தோள்பட்டை வரை விழுந்து உள்ளது. கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அதில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. ஒரு கை அபய முத்திரையை காட்டிக் கொண்டு இருக்க மற்றதில் சிவலிங்கம் இருக்க அவர் ஒரு வீர சைவர் என்பதை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. அதன் அடியில் உள்ள வாசகம் 'பாலசித்த சங்குகுணர்' . அதன் மூலம் மற்ற இருவரையும் அடையாளம் காண முடிகின்றது. அது கலி காலத்தை சார்ந்தது. அதாவது 4245 கலி என்ற கி .பி 143 ஆம் ஆண்டை குறிக்கின்றது.
நான்காம் பகுதியில் உள்ள சிற்பத்தில் இரண்டு பக்தர்கள் ஒருவரை சூழ்ந்து கொண்டு நின்றிருக்க அவர்களிடையே ஒரு சித்தர் காணப்படுகின்றார். அந்த சித்தர் கால்களை மடித்து வைத்தபடி படுத்துக் கொண்டு இருக்கும் ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து இருக்கின்றார். (படம்-12). மீசை வைத்துக் கொண்டு கழுத்தில் சிவலிங்க மாலை அணிந்து உள்ள அவர் துறவி போல காட்சி தருகின்றார். 'பாலஸ்வாமி' என செதுக்கப்பட்டு உள்ள அந்த சிற்பம் 3245 கலி அதாவது 1143 ஆம் ஆண்டை சார்ந்தது. அந்த காலத்தில்தான் 'பஸவா' மற்றும் 'ஆலம்ம பிரபு' போன்றவர்களும் இருந்துள்ளார்கள். கடைசி பகுதியில் நின்ற நிலையில் இடுப்பில் வேட்டி கட்டிக் கொண்டு சால்வையை போர்த்தியபடி உள்ள சிற்பத்தின் அருகில் காணப்படும் சிறிய மேஜை மீது பரிசுப் பொருட்கள் உள்ளன. அவர்தான் மடத் தலைவர்களின் பணியாட்களை நிர்வாகிப்பவராக இருந்திருக்க வேண்டும். அந்த கல்வெட்டில் உள்ள வாசகத்தின்படி அது 'பாலஸ்வாமிகள்' நியமனம் செய்யப்பட்ட பிறகு செய்யப்பட்டு இருக்க வேண்டும். கல்வெட்டில் காணப்படும் 25.2.28 என்ற அரபு வாசகத்தில் இருந்து அது 1928 ஆம் ஆண்டை சார்ந்தது எனத் தெரிகின்றது. மடத்தின் ஆவணங்களின்படி அந்த மடத்தின் மடாதிபதி 1965 ஆம் ஆண்டு இறந்திருக்க வேண்டும். இப்போது உள்ள பத்தொன்பதாவது மடாதிபதி அவருக்குப் பின் வந்தவர். மைலம் தனித் தன்மையுடன் கூடிய கலாசாரத்தின் அடிப்படையில் எழுந்திருக்கலாம். The late Francoise L'Hernault was a research fellow with the Ecole Française d'Extrēme-Orient in Pondicherry (French Institute for Oriental Studies) who specialized in the architecture and the iconography of South India. She undertook studies on the Darasuram, Gangaikondacholapuram and Tiruvannamalai temples and on the iconography of Subrahmanya in Tamilnadu. This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998Index of research articles on Skanda-MurukanOther articles about Kaumara Iconography and Art History:Karttikeya in ancient Cambodia
Karttikeya in ancient China Skanda in Chinese Buddhism Index of research articles on Skanda-Murukan ![]() |