Lord Skanda-Murugan
 

முருகன், சுப்பிரமணிய அல்லது கார்த்திகேயர்

முருகன், சுப்பிரமணிய அல்லது கார்த்திகேயர்

பேராசிரியர் பீ.சி. ஜெயின் மற்றும் டாக்டர். தல்ஜீத்

Original article in English: "Murugan, Subrahmanya or Karthikeyan"

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

இதில் உள்ளப் படம் சிவபெருமானின் இளைய மகனான கார்த்திகேயா அல்லது ஸ்கந்தனைக் குறிக்கின்றது. தென் இந்தியாவில் அவரை முருகன் , சுப்ரமண்யா அல்லது கார்த்திகேயன் என்று கூறுகிறார்கள். திருப்பதி பாலாஜி மற்றும் சிவபெருமானுக்கு இணையானக் கடவுளாகவே அவர் கருதப்படுகிறார். சூறாவளி மற்றும் இயற்கை அழிவுகளில் இருந்து நம்மை காப்பாற்றும் தர்ம சிந்தனைக் கொண்டக் கடவுள், மங்கலத்தை தருபவர், செல்வம், மழலை செல்வம், வாழ்வில் வளம் மற்றும் அனைத்தையும் தருபவர் என்பதை தன்னுடைய பக்கத்தில் அமர்ந்து உள்ள வள்ளி மற்றும் தெய்வானை உருவங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். அதனால்தான் வடநாட்டில் தனது மனைவிகளான ரித்தி மற்றும் சித்திகளும் உள்ள கோலத்தில் காட்சி தரும் வினாயகரைப் போலவே ஸ்கந்தனும் அவருடைய இரண்டு மனைவிகளும் அவருடைய இரண்டு தொடைகளிலும் அமர்ந்துள்ளதைப் போலவே சித்தரிக்கப்படுகிறார். பிரகாசமான தோற்றத்துடன், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் அவருடைய உருவங்கள் படைக்கப்படுகின்றன. அவருடைய வாகனமாக மயில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறது. அது காலத்தை கடந்து மட்டும் நிற்கவில்லை, அவருடன் உள்ள பிணைப்பையும் காட்டிய வண்ணமே உள்ளது.

பின்புறத்தில் வட்ட வடிவான ஒளியுடன் ஆகாய நீல நிறத்தில், தங்க மற்றும் பிற விலை உயர்ந்த மணிக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள அவருடைய உருவம் நம் கண்களுக்கு மட்டும் கவர்ச்சியாகத் தெரியவில்லை, மாறாக அவர் கடல், அதன் சீற்றங்கள், உள்ளே அடங்கி உள்ள செல்வங்கள், ஆகாயம், அதனால் ஏற்படும் சூறாவளி , மழை என அனைத்திலும் வியாபித்து உள்ளவர் என்பதை குறிப்பாக காட்டும் வகையில் அப்படி அமைக்கப்பட்டு உள்ளது.

அவர் மயில் மீது அமர்ந்திருக்க, அந்த மயிலோ ஒரு பாம்பின் மீது நின்றுள்ளது. அந்தக் காட்சி, காலத்தைக் குறிக்கின்றது என்பது இந்திய ஐதீகம். அந்த மயிலின் அலகில் இன்னொரு பாம்பையும் கொத்திக் கொண்டு உள்ளது. அந்தக் காட்சி முருகன் காலத்தைக் கடந்து நின்றாலும் அதைக் தன் கையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளார் என்பதைக் குறிக்கின்றது. அதில் காணப்படும் இரண்டு பக்தர்களில் முன்னால் செல்லும் வெளுப்பானவர், இந்த பிரபஞ்சத்தின் சத்குணா அதாவது நல்ல குணங்களைக் எடுத்துக் காட்டும் விதத்தைக் குறிக்க , பின்னால் செல்லும் கருப்பு மனிதர் பிரபஞ்சத்தின் தீமைகளை அதாவது சஜோகுணா என்பதை எடுத்துக் காட்டுவது போல உள்ளது. இருவருமே சிவ கணங்கள் என்பதைக் காட்ட அவர்கள் அணிந்துள்ள திருநீறும், அவர்கள் மீதுள்ள பிறப் பொருட்கள் அந்த இரு குணங்களையும் (சத்குணா மற்றும் சஜோகுணா ) பிரதிபலிக்கின்றன.

புராணங்களில் கூறப்படும் ஆறு முகங்களைக் கொண்ட கார்த்திகேயர் தென் இந்திய பாணியில் வரையப்படும் வரைபடங்களில் அநேகமாக ஒரு முகத்துடனேயே காட்டப்படுகிறார். இந்தப் படத்தில் அமர்ந்துள்ளவர் லலிதாசன கோலத்தில் இருக்க, கலையுணர்சியுடன் அவர் அழகை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. இ ந்தப் படத்தில் உள்ள அவருடைய நான்கு கைகளில் இரண்டு கைகள் மேல் நோக்கி இருந்தவாறு கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி இருக்க, கீழுள்ள இரு கைகளும் அபய மற்றும் வரத முத்திரைகளை வெளிப்படுத்தியவாறு உள்ளது. அதே சமயம் அந்த இரு முத்திரைகளைக் காட்டும் கைகளும், ஒரு நீண்ட வேல் ஒன்றையும் பிடித்திருப்பதின் மூலம் நானிருக்க பயமேன் என்பதைக் கூறி, தர்ம சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. அப்படி வரையப்படும் உருவ அமைப்புக்களில், முக்கியமாக ஆடை, அணிகலன்கள், கிரீடம் மற்றும் மாலைகள் போன்றவை தென் இந்திய மரபைக் கொண்டவையாக உள்ளன.

தென் இந்திய மரபின்படி வரையப்பட்டு உள்ள இந்த படத்தில் முருகனின் தொடையில் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய இரண்டு மனைவிகள். ஆனால் சில வேத புத்தகத்திலோ கார்திகேயருக்கு ஒரு மனைவி என்றும், அவளே தேவசேனா என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. முருகனின் மனைவி என்பதினால் அவளை கார்த்திகேயனி அல்லது ஏழு தாயார்கள் எனக் கூறப்படும் சப்தமாத்ரிகைகள் எனப்படுபவர்களுக்கு இணையானவளாக கருதி குமாரி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாராம்பரிய நம்பிக்கைக்கு மாறாக முருகனின் ஒரு மனைவியான தேவயானியை யயாதி மன்னனின் மனைவி என்றும், அவளை அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாருடைய மகள் என்றும் ஒரு சில வேத புத்தகங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருவேளை தேவயானி மற்றும் தேவசேனா என்ற பெயர்கள் ஓரளவு ஒரே மாதிரியாக இருப்பதினால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்.

அதிகாரபூர்வமான வேத புத்தகத்தில் கார்த்திகேயர் சிவபெருமானின் விந்துவில் இருந்து வந்தவர் என்றே கூறப்பட்டு உள்ளது. ஒரு புராணக் கதையின்படி ஒருமுறை சிவபெருமான் காமத்தில் மூழ்கி இருந்தபடி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து வெளியே வரவேயில்லை. அப்போது தீய சக்திகள் வலிமை அடைந்து வந்து கொண்டு இருக்க, அதனால் கவலையுற்ற தேவர்கள் அவரிடம் சென்று அவரது காம கேளிக்கையை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டினார்கள். ஆனால் அப்போது தோன்றிய பிரச்சனை அவருடைய விந்துவை என்ன செய்வது என்பதே. ஆகவே அதை அக்னி பகவான் எடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவாயிற்று. அதை எடுத்து வைத்துக் கொண்ட அக்னியினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் போக, அவர் அதை கங்கை நதியில் போட்டு விட்டார். கங்கையினாலும் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் போக அவளோ அதைக் கொண்டு போய் ஸ்ராவனா எனும் வனப்பகுதியில் தள்ளி விட்டாள். அங்கு அந்த விந்து ஒரு குழந்தை ஆயிற்று.

பிறந்த அந்த குழந்தையின் அழுகுரலை கேட்டு, அந்த வழியே சென்று கொண்டு இருந்த ஆறு கிருத்திகைகளும் அங்கு சென்று அந்தக் குழந்தையைப் பார்க்க, அந்த குழந்தையும், ஒவ்வொருவரையும் நோக்கித் திரும்பிப் பார்த்தபோது ஒவ்வொரு புதிய முகத்தை அதன் கழுத்தில் தோன்ற வைத்ததாம். ஆகவே அந்த ஆறு கிருத்திகைகளும், அந்த ஆறு முகத்திலும் பாலூட்டி பாதுகாத்தார்கள். அதன் பெயர் கார்த்திகேயா என ஆயிற்று. அந்தக் குழந்தையின் பிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட சிவன், பிரும்ம, விஷ்ணு போன்ற மூவரும் அங்கு வந்து விட, அக்னி, கங்கை, கிருத்திகைகள், பார்வதி மற்றும் ஸ்ராவனா என அனைவரும் அந்தக் குழந்தை தம்முடையதே என சொந்தம் கொண்டாட, அதில் தலையிட்டு தீர்ப்புக் கூறிய சிவபெருமான் குமரா எனும் பெயரில் உள்ளபோது அந்தக் குழந்தை கங்கையினுடையது, ஸ்கந்தன் எனும்போது பார்வதியின் குழந்தை, கார்த்திகேயா என்பதுபோது கிருத்திகைகளின் குழந்தை, மஹாசேனா எனும் பெயரில் அக்னியின் குழந்தை, சரவணா எனும்போது ஸ்ராவனனின் குழந்தை , மற்றும் குஹா எனும்போது சிவ பெருமானின் குழந்தையாகவும் பார்க்கப்படும் என்றார்.

பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் மூவரும் அந்தக் குழந்தையை இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை இந்திரனின் சேனைக்கு தளபதியாக்கினார்கள். அங்கு வந்த அனைத்து கடவுட்களும் அவருக்கு பல்வேறு ஆயுதங்களைக் கொடுக்க விஷ்ணுவின் வாகனமான கருடன் முருகனுக்கு வாகனமாக இருக்க தனது மகனான மயிலையும் அவருக்கு தந்தார். அவர் தலைமையில் இந்திரனின் சேனை தாரகாசுரன் என்ற அசுரனுடன் யுத்தத்தை துவக்க, கார்த்திகேயர் தாரகாசுரனையும் சேர்த்து அவனுடைய ஏழு அசுரர்களையும் அந்த யுத்தத்தில் அழித்தார். அப்போது கார்திகேயர் பிறந்து ஏழே நாட்கள்தான் ஆகி இருந்தது. அதற்கு முன்னர் தாரகாசுரன் பிரும்மாவிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்த வரத்தின்படி அவனை யாராலும் அழிக்க முடியாது. பிறந்த குழந்தை பதினைந்து நாட்களைக் கடந்து விட்டால் அதனாலும் அவனை அழிக்க முடியாது.

மகாபாரதத்தில் கார்த்திகேயரின் பிறப்புக் குறித்து வேறு விதமாக கூறப்பட்டு உள்ளது. தக்ஷ பிரஜாபதிக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் தேவசேனா மற்றும் தெய்த்யசேனா என்பது. இருவரும் மானச சரஸ் குளத்தில் குளிப்பது உண்டு. ஒருநாள் கேஷி எனும் அசுரன் அந்த வழியே சென்று கொண்டு இருந்தான். அப்போது அவர்களின் அழகைக் கண்டவன் அவர்களை அடைய எண்ணினான். தெய்த்யசேனா அதற்கு ஒப்புக் கொண்டாலும் தேவசேனா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அவன் அவளை பலவந்தமாக தூக்கிக் கொண்டு போக முயன்றபோது அந்த வழியே சென்று கொண்டிருந்த இந்திரனை கூவி அழைத்து அவர் உதவியை நாடினாள். ஓடி வந்த இந்திரனுடன் அவன் யுத்தம் செய்ய அந்த அசுரன் ஒரு மலையை இந்திரன் மீது வீசி ஏறிய அதையும் இந்திரன் தூள் தூளாக்கி விட, பயந்து போன கேஷி தன்னுடன் தெய்த்யசேனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

ஆகவே தேவசேனா தனக்கு கிடைக்கும் கணவன் அசுரர்களையும், யக்ஷகர்களையும் அழிக்கும் வல்லமைப் படைத்தவராக இருக்க வேண்டும் என இந்திரனிடம் வேண்டிக் கொள்ள , அப்படிப்பட்ட பலம் கொண்டவர் எங்கு இருக்க முடியும் எனப் புரியாமல் தவித்த இந்திரன், அந்த விஷயத்தை பிரும்மாவிடம் கொண்டு செல்ல, அவரே அனைத்து கடவுட்கள், மற்றும் தேவர்களின் உதவியை நாடி ஆறு தலை குழந்தையை சிவன் மூலம் வெளிப்பட வைத்து தேவசேனாவை மணக்க ஏற்பாடுகளை செய்தார்.


பேராசிரியர் P.C. ஜெயின் இந்திய இலக்கிய கோட்பாடுகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். Dr. தல்ஜீத் என்பவர் தேசிய காட்சியகத்தின் விஷுவல் ஆர்ட்ஸ் காலரியின் பொறுப்பாளர் ஆவார். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இந்தியக் கலை மற்றும் பண்பாடுகளில் பல புத்தகங்களை எழுதி உள்ளார்கள்.

Source: www.exoticindiaart.com

Other articles about Kaumara Iconography and Art History:

  • Iconography of Skanda-Murukan
  • 'Iconography of Murugan' by Raju Kalidos
  • "Trimurti in Medieval South India"
  • "Iconography of Somaskanda"
  • "Palani Andavar Idol: A Scientific Study"
  • "Rare Image of Brahmasasta"
  • "Kinetic Iconography of Murukan"
  • The Iconography of Goddess Kaumārī
  • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
  • "Significance of Kaumara Icons"
  • "Mailam Murukan temple"
  • "7th cent. Murukan image discovered"
  • "Vallakkottai Murukan Temple"
  • "Karttikeya Images of Ancient Java"
  • "Skanda Images in Ancient Cambodia"
  • "17 Iconographical Aspects of Subrahmanya"
  • 19th Century Bengali Watercolor of Karttikeya
  • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
  • Galleries of Kaumara Iconography

  • Gallery One: Tiruvavaduthurai Adheenam
  • Gallery Two: 1920's - 40's collection
  • Gallery Three: early to late 20th century
  • Gallery Four: 1930-50 lithographs
  • Aru Padai Veedu paintings
  • Paintings of famous temple moolavars