Lord Skanda-Murugan
 

ஆஸ்திரேலியாவில் முருக வழிபாடு

டாக்டர். ஆறுமுகக் கந்தையா

Original article in English: Murukan worship in Australia

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

Tamil population in Australia by states

ஆசியாவிலேயே மிகச் சிறிய நிலப்பகுதியான ஆஸ்திரேலியாவில் 40,000 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வ குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்னர் அதாவது 1788 ஆண்டு முதல் பிரிடன் நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு வந்து வாழத் துவங்கிய பின் மெல்ல மெல்ல வளர்ந்த அந்த நிலப்பரப்பு ஒரு நாடு என்ற பெருமை பெற்றது. சுமார் 18 லட்ச மக்கள் அங்கு இப்போழுது வசிக்கின்றனர். இன்று அந்த நாட்டிற்கு செல்பவர்கள் ஒரு காலத்தில் பூர்வீகக் குடியினர் இருந்த இடம் எனக் கருதப்பட்ட நாடு இன்று முற்றிலும் மாறுபட்டு உள்ள நிலையைக் காண முடியும்.

'ஆஸ்திரேலியா' பலதரப்பட்ட மொழிகள், மற்றும் பல்வேறு இன, மத, கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. குறைந்தது நூறு நாட்டை சேர்ந்த பல்வேறு இன மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் நூற்றுக்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அந்த நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்ஒருவரும் தங்களுடைய மொழிகளில் உரையாடி, தங்களுடைய கலாசாரத்தை கடைப் பிடித்துக் கொண்டும், தங்களுடைய நாட்டின் தெய்வ வழிபாட்டையும் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதனால்தான் அங்கு உள்ள தமிழர்களால் தம்முடைய மொழி, கலாசாரம் மற்றும் மத வழிபாட்டையும் தொடர்ந்து கொண்டு இருக்க முடிகின்றது.

1981 ஆம் ஆண்டுக்கு முன் அங்கு சுமார் ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல மற்ற இனத்தினரைப் போலவே அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும பரவிய தமிழர்கள் அந்த இடங்களில் தமக்கென கலாசார, வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொண்டனர். நிறைவான கல்வி அறிவு பெற்ற மக்கள் என்பதினால் அங்கு சென்று வாழத் துவங்கிய மிகக் குறைந்த காலத்திலேயே அவர்கள் தமக்கென ஆலயங்களை நிறுவிக் கொண்டனர்.

'நியூ சவுத் வேல்ஸ்' (NSW) எனும் நகரில் உள்ள 'ஹெலன்ஸ்பர்க்' (Helensburgh) எனும் நகாpல்தான் முதன் முதலில் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு' ஒரு ஆலயம் அங்கு சென்ற இந்து மக்களினால் கட்டப்பட்டது. ஆஸ்திரேலியா ஆறு முக்கியமான மானிலங்களைக் கொண்டு உள்ளது. அவை 'நியூ சவுத்வேல்ஸ்', 'விக்டோரியா', 'மேற்கு ஆஸ்திரேலியா', 'கிவீன்ஸ்லாந்து', 'தெற்கு ஆஸ்திரேலியா', 'தாஸ்மேனியா', 'ஆஸ்திரேலிய தலைநகர பூமி' மற்றும் 'வடக்கு பகுதி' என்பன அவை . அத்தனை இடங்களிலும் உள்ள தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் சைவர்கள். அவர்கள் 1994 ஆண்டிற்குப் பிறகு அங்கு சிவன், வினாயகர், முருகன் போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்களை அமைத்தனர். 1996 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியாவில் 18,690 தமிழர்கள் இருந்தனர் எனத் தெரிய வந்தது. கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணை 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் காட்டப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

ஆனால் தனி நபர் கணக்கெடுப்பு நடத்திய இந்த ஆசிரியரின் கூற்றின்படி அப்போது இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 30,000 என்ற அளவில் இருக்கும் எனத் தெரிந்தது. அதில் ஆச்சரியமான உண்மை என்ன எனில் 'நியூ சவுத்வேல்ஸ்' மானிலத்தில் மட்டும் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் இருந்த மொத்த தமிழர்களின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேலாகும்.

அட்டவணைப்படி 'ஆஸ்திரேலியாவில்' இருந்த 18,690 தமிழர்களில், 9037 தமிழர்கள் 'நியூ சவுத்வேல்ஸ்விலும்', 6251 தமிழர்கள் 'விக்டோரியா' மானிலத்திலும் உள்ளனர் எனத் தெரிகின்றது . 'தாஸ்மேனிய' மானிலத்தைத் தவிற மற்ற அனைத்து மானிலங்களிலும் இந்து ஆலயங்கள் உள்ளன. 'நியூ சவுத்வேல்ஸ்', 'விக்டோரியா' மற்றும் 'மேற்கு ஆஸ்திரேலியாவில்' ஒன்றுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. முருகனுக்கு மூன்று மானிலங்களில் ஆலயம் உள்ளது. அவை 'நியூ சவுத்வேல்ஸ்', 'விக்டோரியா' மற்றும் 'மேற்கு ஆஸ்திரேலியா' என்பன. அதைத் தவிற 'ஆஸ்திரேலியா'வின் தலைநகர பூமியிலும் ஒரு முருகன் ஆலயம் உள்ளது.

நியூ சவுத்வேல்ஸ்லில் உள்ள முருகன் ஆலயம்

Sydney Murukan enshrined in his sanctum sanctorum
கருவறையில் சிட்னி ஆலய முருகன்

'நியூ சவுத்வேல்ஸ்' மானிலத்தின் தலைநகரமான 'சிட்னியில்' 'மேஸ்ஹில்ஸ்' (Mays Hill) எனும் இடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் முருகனுக்கு ஆலயம் உள்ளது. குன்றுதோறும் குமரன் என்பதினால் அவர் எழுந்தருளும் இடங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் அமைந்து உள்ளன. சிட்னி முருகனும் 'மேஸ்ஹில்ஸ்' என்ற மலைப் பகுதியில்தான் உள்ளது.

அந்த இடத்தை வைகாசிக் குன்று என அழைக்கின்றனர். சிட்னியில் முதன் முதலாக 'சிவஜோதி தணிகை ஸ்கந்தகுமார்' என்ற ஸ்ரீலங்க நாட்டு பிரஜையினரால்தான் முருக வழிபாடு துவங்கியது. அவர்தான் பஞ்சலோகத்திலான சிலையை (தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் மற்றும் இரும்பு போன்றவை கலந்த பஞ்சலோகம்) 1983 ஆம் ஆண்டில் எடுத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொண்டு அதற்கு பூஜை செய்யத் துவங்கினார். மேலும் அந்த பூஜையில் கலந்து கொள்ள அவர் தனது நண்பர்களையும் அழைத்தார்.

1986 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தன் குடும்பத்தினருடன் அந்த சிலையை எடுத்துச் சென்று 'ஸ்டிராத்பீல்ட்' (Strathfield Girls High School) பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இருந்த பொது அறை ஒன்றில் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபட ஏற்பாடு செய்தார்.

இன்றும் அந்த சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ள அந்த உயர்நிலைப் பள்ளியே தமிழர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்து உள்ளது. 1985 ஆம் ஆண்டு சைவ மன்றம் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் பத்து வருட காலம் கஷ்டப்பட்டு சிட்னி முருகன் என்ற ஆலயத்தைக் கட்டினார்கள்.
Sydney Murukan Temple gopuram and entrance
சிட்னி முருகன் ஆலய கோபுரம்
Sydney Kodi Abhisekam.
சிட்னி ஆலய கொடி அபிஷேகம்
1990 ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து இலகாவிடம் இருந்தும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைந்து இருந்த ஒரு இடத்தை சைவ மன்றம் விலைக்கு வாங்கியது. 'ஸ்டிராத்பீல்ட்'டில் இருந்த பள்ளியில் இருந்து சுமார் பத்து கிலோ தொலைவில் இருந்த 'மேஸ் மலைப்' (Mays Hill) என்ற இடத்தில் உள்ள அந்த ஆலயத்தின் மூன்று பக்கங்களிலும் எந்த குடியிருப்புக்களும் கிடையாது.

ஆரம்பத்தில் அந்த இடத்தை வாங்கிய அமைப்பினர் அங்கு கட்டிடம் கட்டி அதை முருகனுக்கு விழாக்கள், ஆராதனைகளை செய்யவும், கலையரங்கமாகவும் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 'முருகன் ஆலயம்' மற்றும் 'தமிழ் கலாச்சார மையத்தை' அமைக்க அந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்னியின் மேற்குப்புறத்தில் இருந்த அந்த 'மேஸ் மலையில்' முருகன் ஆலயக் கட்டிடப் பணி துவங்கியது.

'நியூ சவுத்வேல்ஸை' சேர்ந்த சைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மாபெரும் அந்த ஆலயத்தைக் கட்டி முடித்தனர். அந்த ஆலயத்தில் இருந்த முன்று பிரிவுகளில் மத்தியில் முருகப் பெருமானும் மற்ற இரண்டிலும் சிவன் மற்றும் அம்பாள் சிலைகள் நிறுவப்பட்டன. மூல சன்னதியில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பதினேழாம் தேதி அன்று ஆலயத்தில் 'சிட்னி' முருகப் பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.

அது முதல் குன்றில் வாழ்ந்து கொண்டிருந்த முருகப் பெருமான் 'மேஸ்மலைப்' பகுதியின் குன்றிலும் வசிக்கத் துவங்கினார். 'சிட்னி' முருகன் 'ஆஸ்திரேலியாவில்', முக்கியமாக 'சிட்னி'யில் இருந்த உள்ள இந்துக்களுக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்து உள்ளார். கும்பாபிஷேகம் நடந்து ஒரு வருட காலம் முடியும் முன்னரே அந்த ஆலயத்தில் பல விழாக்கள் நடைபெற்றது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. 1985 ஆம் ஆண்டு முதல் துவக்கப்பட்ட சைவ மன்றத்திற்கு தலைமை ஏற்றவர்களின் பட்டியல் இது.

'Vel' enshrined in the sanctum sanctorum, Victoria Murugan Temple
விக்டோரியா ஆலயத்தில் முருகனின் வேல்
Side view of Śrī Subramania Swami Temple Helensburgh, NSW
ஹெலேன்ஸ்பெர்க் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம்
Rear view of Śrī Subramania Swami Temple Helensburgh, NSW

விக்டோரியா முருகன் ஆலயம்

'ஸ்ரீலங்கா'வைச் சார்ந்த திருமதி செல்வேந்திரா என்பவர் மூலமே இந்த நகரில் முருக வழிபாடு துவங்கியது. அவர்தான் ஐந்து உலோகங்களில் ஆன (தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் மற்றும் இரும்பு போன்றவை கலந்த பஞ்சலோகம்) பஞ்சலோக முருகன் சிலையை 'ஜாப்னா' (Jaffna) நகரில் இருந்து கொண்டு வந்தார். 1991 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு 'மெல்பர்ன்' (Melbourne) என்ற நகரில் இருந்த சமூகக் கூடங்களிலும் தனியார் இல்லங்களிலும் கூட்டு வழிபாடு துவக்கப்பட்டது.

திருமதி செல்வேந்திரா அவருடைய தந்தையும் முருக பக்தருமான வீ. தம்பினாயகத்தின் ஆசையை நிறைவேற்ற ஆலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். விக்டோரியா மானிலத்தில் இருந்த 'மெல்பர்ன்' நகரில் ஒரு முருகன் ஆலயத்தைக் கட்டுவதற்காக 1995 ஆம் ஆண்டில் கலை மன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. 'மெல்பர்ன்' நகரின் 'நைட் அவின்யூ' எனும் இடத்தில் உள்ள அந்த ஆலயத்தை அமைக்கும் முதல் கட்டப் பணி கணேஷமூர்த்தி என்பவர் தலைமையில் அமைந்திருந்த கலைமையத்தினரால் கட்டப்படத் துவங்கியது . 1999 ஆம் ஆண்டு ஜனவாp இருபத்தி மூன்றhம் தேதியன்று சங்காபிஷேகம் செய்து 'மெல்பர்ன்' முருகன் என்ற பெயரில் முருகப் பெருமானின் ஆலயம் திறக்கப்பட்டது.

'ஸ்ரீலங்கா'வில் இருந்த 'நல்லுர்' மற்றும் 'ஜாப்னா' போன்ற இடங்களில் இருந்த முருகன் ஆலயங்களில் வேல் ஒன்றை மட்டுமே வைத்திருந்து வழிபட்டது போல இந்த ஆலயத்தின் மூல கற்பக்கிரகத்திலும் முதலில் முருகனைக் குறிக்கும் வேல் ஒன்றையே வைத்து வழிபட்ட பின், மெல்பர்ன் கலை மையத்தினரின் விருப்பப்படி கர்பகிரகத்தில் ஒரு முருகன் சிலையையும் பிரதிட்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 'மெல்பர்ன்' கலை குழு மையம் முருகன் ஆலய முடிவு நிலையான மூன்றாம் கட்ட பணியையும் விரைவாக நடத்தி முடிக்க எண்ணி அதற்கேற்ப வே]லக]ள மும்முரமாகத் செய்யத் துவங்கி உள்ளது.

நியூ சவுத்வேல்ஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயம்

'நியூ சவுத்வேல்ஸ்லில்' உள்ள சிட்னி நகரில் இருந்து 50 கிலோ தொலைவில் உள்ள 'ஹெலன்ஸ்பர்க்' (Helensburgh) என்ற இடத்தில் இருந்த சிவன் ஆலய மண்டப வளாகத்தில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம் அமைந்து உள்ளது. சிவனாலயத்தின் பக்கத்திலேயே முருகன் ஆலயமும் அமைந்து உள்ளது சிறப்பைப் பெறுகின்றது. 'ஹெலன்ஸ்பர்கில்' சிவாலய மண்டப வளாகமும், வெங்கடேஸ்வர ஆலய மண்டப வளாகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

சிவால வளாகத்தில் சிவன், பார்வதி, முருகன், தெய்வானை, துர்காம்பிகை, தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. வெங்கடேஷ்வரர் ஆலயத்திலோ மகாலஷ்மீ, ஆண்டாள், ராமர், சீதை, லஷ்மணர் மற்றும் ஆஞ்சனேயருக்கு சன்னதிகள் உள்ளன. 'ஹெலன்ஸ்பர்கில்' சிவன், பார்வதி, வள்ளி மற்றும் தெய்வானை போன்ற தெய்வ சன்னதிகளுடன் சுப்ரமணிய ஸ்வாமியை மூலஸ்தானத்தில் வைத்து 1994 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக மலரில் முருகனைப் பற்றி பின் வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது ''சிவபெருமானுடைய புதல்வாரன அவர் கார்த்திகேயர், ஸ்கந்தன், ஷண்முகன், முருகன் என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர்.

நமக்கு ஐந்து புலன்களும், மனமும் இருப்பதாக கூறும் அந்த ஆறு தலையுடைய ஷண்முகர் அவை அனைத்தையுமே ஒன்றிணைத்தால்தான் தெய்வீகத்தின் பாதையில் செல்ல முடியும் என்கிறார். இந்த ஆலயத்தில் அவர் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி என்ற பெயரில் வேதங்களின் பிரதிபலிப்பாக எழுந்தருளிக் கொண்டு மோட்சம் அடையும் பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார்.

அவருக்கு தேவசேனா மற்றும் வள்ளி என்ற இரண்டு மனைவிகள் உண்டு. அவர் மயில் மீதேறி வருவதின் மூலம் நமக்கு கர்வமும், தான் என்ற அகம்பாவமும் இருக்கக் கூடாது என்பதைக் காட்டுகிறார்''. 'ஆஸ்திரேலியா' பல்வேறு கலாச்சாரங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளதால் அங்கு சைவ மற்றும் வைஷ்ணவ ஆலயங்கள் ஒரே இடத்தில் அமைக்க முடிந்தது. 1985 ஆம் ஆண்டில் 'நியூ சவுத்வேல்ஸில்' உள்ள 'ஹெலன்ஸ்பர்க்கில்'தான் முதன் முதலாக இந்துக்களினால் ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம் கட்டப்பட்டது. அதன் பிறகே 1994 ஆம் ஆண்டில் சிவாலய வளாகத்திற்குள் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயமும் எழுந்தது. அந்த முருகன் ஆலயமே 'ஆஸ்திரேலியாவில்' முதன் முதலாக அகம சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

Śrī Subramania Swami Temple with Śrī Venkateswara Temple
and mandapam in the background
ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம். அதன் பின்புறம்
சிட்னி முருகன் ஆலய மஹோத்சவம் - 2001

ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி, ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயங்கள்

'ஆஸ்திரேலிய' தலைநகர் பகுதியில் உள்ள முருகன் ஆலயம் 'ஆஸ்திரேலிய' தலைநகர் பகுதியில் இருக்கும் 'கான்பெராவில்' 151, பீஸ்லி தெரு, டொரென்ஸ் என்ற என்ற விலாஸத்தில் 1996 ஆம் ஆண்டு கட்டப்படத் துவங்கிய முருகன் ஆலயம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைய அதற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
Canberra Murukan Temple construction in progress
கட்டப்பட்டு வரும் கான்பெரா முருகன் ஆலயம்
Canberra Murukan Temple construction in progress

ஆலயத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டும் பணியில் கைதேர்ந்த இந்திய நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி ஒருவர் மூலம் அகம விதிப்படி ஆலய நிர்மாணம் நடைபெறுகின்றது. அங்கு வினாயகர், முருகன், சிவன், வள்ளி, தெய்வயானை போன்ற மூல சன்னதி தெய்வங்களுடன் ஸ்ரீ தேவி, பூதேவி, நடராஜர், அம்மன், விஷ்ணு, துர்கை, சரஸ்வதி, லஷ்மி, பைரவர் போன்றவர்களுக்கும் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சன்னதிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆலயத்தின் முக்கியப் பகுதி விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு விடும்.

இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன எனில் முருகனின் ஆறு தலங்களைக் காட்டும் வகையில் ஆறு ஆலயங்களை உள்ளடக்கியவாறு இருக்கும். 'கான்பெரா' சைவ ஆலயம் மற்றும் கல்விச் சங்கம் என்பவர்களுடைய இதழான ''கான்பெரா முருகன் ஆலய வேண்டுகோள்'' என்பதில் அங்கு கட்ட உள்ள முருகக் கடவுளின் ஆலயம் திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, ஸ்வாமி மலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களை பிரதிபலிக்கும் வகையில் மிகப் பெரிய அளவில் கட்ட இருக்கும் செய்தியை தெரிவித்தது.

'சிட்னியில்' உள்ள முருக ஆலயம் மற்றும் 'மேற்கு ஆஸ்திரேலியாவில்' உள்ள பால முருகன் ஆலயங்களைப் போன்றே 'கான்பெராவில்' உள்ள முருகன் ஆலயமும் மலைப் போன்ற பகுதியில் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தை 'கான்பெரா' சைவ ஆலயம் மற்றும் கல்விச் சங்கம் என்ற அமைப்பு எந்த விதமான சொந்த லாபமும் இன்றி நடத்துகின்றது. அந்த அமைப்பின் நோக்கம் சிவாலயத்தை நன்கு பராமரித்து அங்கு நல்லதொரு வாசக சாலையை நிறுவி, சைவ சித்தாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்பதே. அந்த அமைப்பில் எஸ். மயில்வாகனன், ஏ.

ஜெகதீஸ்வரன், என். மனோகரன் என்ற முக்கியமான அமைப்பாளர்களுடன் இன்னும் 26 அங்கத்தினர் இருந்து கொண்டு அந்த அமைப்பைத் திறமையுடன் நிர்வாகிக்கின்றனர். அந்த அமைப்பு எந்த நிலையிலும் அது எதற்காக நிறுவப்பட்டதோ அந்தக் கொள்கையில் இருந்து நழுவி விடாமல் இருக்கவும், அதன் மூலம் எந்த தனி நபரும் ஆதாயம் பெற முடியாத வகையிலும் இருக்குமாறும் கடுமையான சட்ட திட்டங்களை உள் அடக்கி நிறுவப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் அந்த ஆலய கும்பாபிஷேகத்தில் தாமே அந்த ஆலயத்தின் எஜமானர்களைப் போலவே வந்து கலந்து கொள்ளலாம்.

மேற்கு ஆஸ்திரேலியா பால முருகன் ஆலயம்

Arulmigu Bala Murugan enshrined in His sanctum sanctorum in Perth, Western Australia
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஆலயத்தில் பால முருகன்

'மேற்கு ஆஸ்திரேலியா'வில் பெர்த் (Perth) நகரின் தெற்குப் பகுதியில் 38 கிலோ தொலைவில் உள்ள 'மண்டோகலுப்' (Mandogalup) என்ற இடத்தில் உள்ளது பால முருகன் ஆலயம். பச்சைப்பசேல் என்ற பசுமையான சமவெளியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு குன்றின் மீது அமைந்து உள்ள இந்த ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள ஆலயத்தைப் போன்றே காட்சி தருகின்றது. மலை மீது வசிக்கும் முருகப் பெருமானின் இந்த ஆலயம் இங்கும் குன்றின் மீது அமைந்து உள்ளது வியப்பல்ல. 1996 ஆம் ஆண்டு முதல் பால முருகனை இங்கு வழிபடத் துவங்கி உள்ளனர். சைவ மகா சபை என்ற அமைப்பு இந்த ஆலயம் இருந்த பகுதியில் முன்பு இருந்த கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்கி அதையே ஆலயமாக மாற்றிக் கட்டி பால முருகன் மற்றும் இதற தெய்வங்களை பிரதிட்சை செய்து உள்ளனர். ஒரு இந்து பூசாரி இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகளை செய்கின்றார். அந்த ஆலயம் உள்ள இடத்தின் வரைபடமும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 1996 ஆம் ஆண்டில் முருகனுக்கு ஆலயம் அமைக்க சைவ மகா சபை என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. ஆலயம் அந்த அமைப்பினால் அமைக்கப்பட்டதினால் அவர்களே அதன் சொந்தக்காரர்கள் ஆவர்.

சுமார் 60 உறுப்பினர்கள் உள்ள அந்த அமைப்பில் 'மேற்கு ஆஸ்திரேலியாவைச்' சார்ந்த எவர் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம். வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் விஷேச பூஜையில் 50 முதல் 75 பேர்கள் வரை கலந்து கொள்கின்றனர். தைப் பொங்கல், தை பூசம் மற்றும் தமிழ் புத்தாண்டு போன்ற தினங்களில் நூற்றுக்கணக்கானோர் அங்கு வந்து வணங்குகின்றனர். இன்னும் ஒரு ஆலயம் அந்த ஆலயவளாகத்திற்குள் சுமார் ஒன்றறை லட்ச 'ஆஸ்திரேலிய' டாலரில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த ஆலயம் உள்ள பகுதியின் மொத்தப் பரப்பளவு 1350 சதுரமீட்டகள். பாலமுருகனுக்கு பத்து மீட்டர் உயர கோபுரம் அமைந்து இருக்க மற்ற தெய்வங்களுக்கு தனித்தனியான சன்னதிகள் உள்ளன.

Perth Temple map

15 மீட்டர் உயர இராஜகோபுரமும் கிழக்குப் பக்கத்தில் கட்டப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் அது கட்டி முடிக்கப்பட்டு விடும். வெகு உயரத்தில் எழுந்தருளி உள்ள பால முருகனின் ஆலயத்தில் எழுப்பப்படும் இராஜகோபுரம் மேற்கு 'ஆஸ்திரேலியாவின்' பெர்த் நகருக்கு இன்னும் அழகைச் சேர்க்கும். சைவ மகா சபை மேற்கு 'ஆஸ்திரேலியாவில்' உள்ள பால முருகன் ஆலயத்தில் ஒரு கலாச்சார மையத்தை தொடங்கி உள்ளது. அந்த ஆலயத்தின் பக்கத்தில் ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்க ஒரு கிராமத்தை அமைக்க எண்ணி உள்ளது. அதனால் தினமும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் கலந்து கொண்டு அதற்கு உதவியாக இருப்பார்கள் என்பதுடன் வயதான 'ஆஸ்திரேலியத்' தமிழர்களுக்கும் அங்கு வந்து குடியேற ஒரு வரப்பிரசாதமாக அந்த கிராமம் அமையும். டாக்டர் ஆர். இராஜகோபாலன் என்ற கொடையாளி ஆரம்பம் முதலே அந்த சைவ மகா சபையின் தலைவராக இருந்து வருகிறார். டாக்டர் இராஜகோபாலனும், திருமதி செல்லி இராஜகோபாலனும்தான் அந்த ஆலய மற்றும் கலாச்சார மையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர்கள்.

பண்டைய சிற்ப கலையை சார்ந்த இந்து ஆலயம்

'ஆஸ்திரேலியாவில்' கட்டப்பட்டு உள்ள ஆலயங்கள் சிற்ப சாஸ்திர முறையில் கட்டப்பட்டாலும் அகம சாஸ்திர முறையில்தான் -சமிஸ்கிருத, சைவ, வைஷ்ணவ, சாக்தா மற்றும் ஜெய்னா என்ற முறையில் - அமைந்து இருக்க வேண்டும். இந்து ஆலயங்களின் அமைப்பு விதி பல அர்த்தங்களை உள் அடக்கி அமைக்கப்பட்டு உள்ளன. ஆகவே வெளி நாடுகளில் உள்ள சைவ, வைஷ்ணவர்கள் கட்டும் ஆலயங்கள் பெரியதோ, சிறியதோ அவை அகம சாஸ்திரத்தின் அடிப்படையிலேயேதான் கட்டப்பட வேண்டும். அப்பொழுதுதான் மற்ற மதத்தினர் இந்து ஆலயங்களின் சிற்பக் கலையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக சிலோனில் உள்ள பிரும்மாண்டமான பொன்னம்பலீஸ்வரர் ஆலயத்தை சர் பொன்னம்பலம் இராமனாதன் என்பவர் தமிழ்நாட்டு ஆலயங்களைப் போலவே அகம சாஸ்திர முறைப்படி கட்டி உள்ளார்.

அதைப் பார்க்கும் அனைத்து வெளி நாட்டினரும் அதை புகழாமல் இருந்ததில்லை. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் உள்ள வெளி நாட்டவர் அகம சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களின் சிற்பகலையின் அழகையும் அவற்றில் அடங்கி உள்ள விஷயங்களான - ஆலயத்தைக் கட்டும் விதம், அதில் அமைக்க இருக்கும் சிற்பங்களை செதுக்குவது, அதற்குத் தேவையான கல் பாறைகளை தேர்வு செய்யும் முறை, அவற்றை அமைக்கும் முறை, கர்பக்கிரகத்தைச் சுற்றி அமைக்க வேண்டிய சிற்பங்கள், கோபுர அமைப்பு என அனைத்தையும் அகம முறைப்படி ஆராய்வது போன்ற தத்துவங்களைக் கண்டு வியந்துபோய் அவற்றை பெரிதும் பாராட்டுகின்றனர்.

இந்து ஆலயங்களே அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாக அமைகின்றது. வயது வித்தியாசம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு, முதியோர் இளைஞர்கள் என்ற கட்டுப்பாடு, படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடின்றி அனைவரும் வந்து சங்கமிக்கும் இடமே ஆலயம். அங்கு அரசியலுக்கோ பிரிவினை எண்ணங்களுக்கோ, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கோ இடம் இல்லை . ஆலயம் மன அமைதியும் சாந்தியும் தரும் இடமாகவே இருக்க வேண்டும்.

முடிவுறை

'ஆஸ்திரேலிய' ஆலயங்களைப் பற்றி நடத்திய ஆய்வு அங்கு முருகன் ஆலயம் வளர்ந்த விதத்தைக் காட்டுகின்றது. 1985 ஆம் அண்டு வரை 'ஆஸ்திரேலியாவில்' முருக வழிபாடோ, முருகனுக்கு என்று ஒரு ஆலயமோ இருந்தது இல்]ல.

'ஆஸ்திரேலிய' மக்கள்தொகை கணக்கின்படி அந்த ஆண்டில் அங்கு இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 3500 க்கும் குறைவானதே. இந்த ஆராய்வின்படி 'ஆஸ்திரேலியாவில்' முதன் முதலில் முருக கூட்டு வழிபாட்டு முறையே துவங்கியது. அதன் பின் அதில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய அமைப்புக்கள் மூலம் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதிலும் இரண்டு முக்கியமான விஷயங்கள் தெரிய வந்தன. ஆலயம் கட்டுவதில் முன்னணியில் நின்றவர்கள் 'ஸ்ரீலங்கா' தமிழர்கள்.

இன்னொன்று வடக்கு 'ஸ்ரீலங்காவில்' முருக ஆலயங்களும், முருக வழிபாடுகளும் பெரும் அளவில் உள்ளது. 'ஆஸ்திரேலியாவில்' உள்ள ஐந்து ஆலயங்களில் நான்கு ஆலயங்கள் 'ஸ்ரீலங்காவைச்' சேர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டவை. 1996 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி அங்குள்ள தமிழர்களில் 70 சதவிகிதம் 'ஸ்ரீலங்காவைச்' சேர்ந்தவர்கள். அதில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்.


Dr. A. Kandiah, Ph.D. (London) is language specialist at the Institute of Languages, University of New South Wales, Australia. In his 35 years of teaching and research experience, he has published over 25 books.

Contact the author:

Dr. Arumugam Kandiah
17, Edward Street
South Strathfield
NSW 2136, Australia
E-mail: akandiah@one.net.au

Contact sydneymurugan@yahoo.com.

Murugan Worship in Melbourne
Murugan Devotion among Tamil Diaspora
More research articles about Skanda-Murukan