Lord Skanda-Murugan
 

வள்ளிமலை ஸ்வாமிகளுடன் என் அனுபவம்

வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமி ஸ்வாமி
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமி ஸ்வாமி

பீ. எஸ். கிருஷ்ண ஐயர்

Original article in English: "My experience with Vallimalai Satchidananda Swamigal"

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

சச்சிதானந்த ஸ்வாமிகளுடைய வாழ்கை வரலாறு போன்ற பற்றிய அனைத்து புத்தகங்களும், முக்கியமாக ஆர். கல்யாணசுந்தரம் (1957) மற்றும் ஸ்வாமி அன்வானந்தா (1975) என்பவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. தற்பொழுது அவர் வாழ்க்கை சரித்திரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே ஸ்வாமிகளுடன் நான் இருந்த பொழுது எனக்கு நேரடியாக கிடைத்த அனுபவம் மற்றும் ஸ்வாமிகளே எனக்கு 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் பற்றி கூறிய செய்திகள் போன்ற அனைத்தையும் தொகுத்து முடிந்தவரை பழுதின்றி அவரைப் பற்றிய ஒரு கட்டுரை தந்து உள்ளேன்.

1917-18 ஆம் ஆண்டுகளில் ஸ்வாமிகள் முருகனுக்கு ஒற்றை பாத கால் நடைப் பயணத்தைத் துவக்கி இருந்தார். முதன் முதலில் ஸ்வாமிகளை நான் 1948 ஆம் ஆண்டு, டிஸம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று திருத்தணியில் சந்தித்தேன். அவரை சந்திக்கும் முன்னர் என் கனவில் ஒருநாள் இரமண மகரிஷி தோன்றி காலியாக இருந்த மைதானத்தில் இருந்த ஒரு ஏணி ஒன்றின் மீது என்னை ஏறச் சொன்னார். நான் அதன் மீது ஏறத் துவங்கிய சற்று நேரத்தில் எனக்கு அதில் ஏற உதவி செய்து கொண்டிருந்த இரமண மகரிஷியைக் காணவில்லை. மாறாக வேறு ஒரு திடகார்த்தமான உடம்புடன் கூடியவர் எனக்கு உதவிக் செய்து கொண்டு இருந்ததைக் கண்டேன்.

சில காலம் கழிந்தப் பின் ஒருமுறை நான் என் நண்பர்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்று கொண்டு இருந்த வழியில், என் நண்பர்கள் வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிடம் என்னையும் அழைத்துச் சென்ற பொழுதுதான் எனக்கு கனவில் வந்து உதவி செய்தவர் வள்ளி மலை ஸ்வாமிகள் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தக் கனவும், அவருடனான தொடர்ப்பும் என்னுடைய வாழ்கையில் பெரும் அங்கம் வகித்தது.

1948 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை ஸ்வாமிகளுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதன் பின்னர் ஸ்வாமிகள் தம்முடைய 80 ஆம் வயதில் சமாதி அடைந்தார்.

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர்
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர்
ஒரு சமயத்தில் உடல் நலமுற்ற ஸ்வாமிகளுடைய வயதின் காரணமாக அவருக்கு ஒரு உதவியாள் தேவையாக இருந்தது. ஆகவே சென்னையில் நான் தங்கிக் கொண்டு இருந்தவாறு 1950 ஆம் ஆண்டு வரை ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தேன். அந்த இரண்டு ஆண்டுகளிலும் ஒரு நாள் கூட அவரை நான் சந்திக்காமல் இருந்தது இல்லை. அவர் எனக்கு ஆன்மீக பாடங்களில் பயிற்சி தந்தார்.

ஸ்வாமிகள், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழைப் பாடாத நாளே இல்லை எனலாம். அருணகிரிநாதர்தான் சிவபெருமான் மீது தேவாரப் பாடல்களைப் பாடிய 'திருஞான சம்மந்தர்முருகனின் அவதாரம்' என்ற உண்மையை ஸ்வாமிகளே எனக்குக் கூறினார். அது மட்டும் அல்ல சிவபெருமான்தான் அருணகிரிநாதர் உருவில் அவதரித்து முருகனைப் புகழ்ந்து பாடிய திருப்புகழ் மூலம் முருகனை எந்த முறையில் துதிக்க வேண்டும் என்பதை உலகிற்குக் கற்றுத் தந்தார் என்றும் அவர் என்னிடம் கூறினார்.

பழனியில் இருந்த ஸ்வாமிகளை முருகப் பெருமானே திருவண்ணாமலைக்குப் போகச் சொன்னாராம். அருணகிரிநாதர் அவதரித்த அந்த இடத்தில் ஸ்வாமிகளுக்கு இரமண முனிவருடன் தொடர்பு ஏற்படும் எனவும், அப்பொழுது தானும் அங்கு வந்து அவருக்கு தரிசனம் தருவதாகவும் கூறி இருந்தாராம். இரமண முனிவரின் உருவில் தண்டாயுதப்பாணி பெருமான் அவதரித்து இருந்ததை ஸ்வாமிகள் கண்டார். அந்த இடத்தில் ஸ்வாமிகள் திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் கற்று அறிந்தார். கடவுளின் அருளினால் அதை முழுமையாகக் கற்றுத் உருக்கமாகப் பாடக் கூடிய அளவில் தேர்ச்சி பெற்றார்.
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமி ஸ்வாமி
வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமி ஸ்வாமி

ஆனால் இரமண மகரிஷியின் கட்டளையால் அவருக்கு சேஷாத்ரி ஸ்வாமிகளை குருவாக ஏற்க வேண்டியதாயிற்று. அவர்தான் திருப்புகழ் என்பது மகா மந்திரம் எனவும், அதைப் பாடினால் வேண்டிய அனைத்துமே வாழ்வில் கிடைக்கும் எனவும் ஸ்வாமிகளிடம் கூறியவர். ஆதி சங்கரர் இயற்றிய 'சிவமானசீகபூஜா' என்பதில் இருந்த நான்காம் ஸ்லோகத்துடன் 'அகைக்கோர் பக்தன்' என்ற திருப்புகழ் மந்திரப் பாடல் எந்த அளவு ஒத்து இருந்தது எனப் பாடிக் காட்டினாராம். அதன் பின்னர் சேஷாத்திரி மகான் ஸ்வாமிகளை கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள முருகன்-வள்ளி இருவரும் வசிக்கும் இடமான வள்ளி மலைக்குச் செல்லுமாறு ஆணை இட்டார். அந்த இடத்தில்தான் ஸ்வாமிகள் சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி இருந்து சாதனாக்கள் செய்தவண்ணம் ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுகளையும் காட்டாமல் அனைத்து மக்களுக்கும் ஆசிகள் வழங்கிய வண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

அப்பொழுதுதான் ஸ்வாமிகளுக்கு வள்ளி மற்றும் முருகப் பெருமானை நேரடியாக சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸ்வாமிகளுக்கு வள்ளி மீது அளவு கடந்த பக்தி உண்டு. வள்ளியை திருப்புகழ் பாடல்கள் மூலமே புகழ்ந்து பாட வேண்டும் எனவும் அப்பொழுதுதான் அவள் சமயம் கிடைக்கும் பொழுது முருகனிடம் நமது தேவைகளை எடுத்துக் கூறுவாள் என்று கூறுவார். ஸ்ரீ வள்ளி அனைவருக்கும் உதவி செய்பவள் என்றும், முருகன் மட்டுமே புருஷ அவதாரம் எனவும் மற்றவர்கள் அனைவரும் அவருக்கு துணைவிகள் என்று கூறுவார். (Jīva-BrahmĀ ikyam). திருப்புகழ் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்வாமிகள் 'திருப்புகழ் ஞான சச்சிதானந்த வள்ளி கைத்தம்' (Tiruppukal Jñana Saccidānanda Valli Caitam) என்ற மருத்துவக் குணம் கொண்ட பாடலை இயற்றினார்.

அவருக்கு எந்த விதத்திலும் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. எத்தவை பணம் வந்தாலும் அந்த இடத்திலேயே அதை அவர் செலவு செய்து விடுவார். எவருக்குத் தேவையோ அவர்களுக்கே அது போய் சேர வேண்டும் என்பது அவர் தத்துவம். மற்றவர்களுக்குப் பணி செய்வதே தன் கடமை என நினைத்தவர்.

அவர் வியாதிகளை குணப்படுத்த தன்னிடம் எந்த விதமான தனி மந்திர சக்தியும் கிடையாது எனவும் தான் ஒரு வள்ளி பாத இதயன் எனவும் கூறிக் கொண்டார்.

திருப்புகழை தினமும் குறிப்பிட்ட எந்த பாடலுடன் துவக்க வேண்டும் என்பதற்கும் ஒரு வரைமுறை வைத்து இருந்தார். ஞாயிறு அன்று ஒரு குறிப்பிட்ட பாடலுடன் துவங்கி அடுத்த சனிக் கிழமை வரை ஒரு குறிப்பிட்ட பாடலுடன் முடிப்பதில் யோக சாஸ்திரக் கலையின் அஸ்திவாரம் காணப்பட்டது . ஒவ்ஒரு நாளும் நமது உடலில் ஒரு குறிப்பிட்ட யோக சக்கரம் ஓடுகின்றது எனவும், சனிக்கிழமை அன்று அனைத்து ஆறு சக்கரங்களும் உடம்பில் ஓடுகின்றன எனவும் விளக்கம் அளித்தார்.

வினாயகர் துதியுடன் தொடங்கி, முருகனை வேண்டுதல், அவருக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகம் என முடிவுறும். அதன் பெயர் 'திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை ' அதாவது பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று அர்த்தம் தரும். அந்த பராயணத்தில் ஆறுபடை வீட்டின் பெருமைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. அந்த பாராயணம் ஆறு யோக சாஸ்திர அடிப்படையில் இருந்ததாம்.

நக்கீர தேவராயர் என்ற முருக பக்தர் இரண்டாம் நூற்றாண்டில் திருமுறுகாற்றுப் படை என்ற நூலை எழுதினார். அவர் முருகனுக்கு ஆறு வீடுகள் எனவும், அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவிவானங்குடி, ஸ்வாமி மலை, திருத்தணி மற்றும் பழமுதிர் சோலை என்ற வள்ளி மலையை குறிப்பிட்டு இருந்தார். அந்த ஆறு இடங்களிலும் முருகப் பெருமான் தன்னுடைய பக்தர்களான ஞானிகளும், முனிவர்களும் தன்னை நினைத்து வேண்டியதினால் அவர்களுக்கு அந்தந்த ஊர்களில் காட்சி தந்து மோட்சம் அளித்தார்.

அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அனுபூதியிலும் ஆறு ஆதார சக்கரங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். அவை :– உல்லாச- நிராகுலா- யோகா- விதா – சல்லாபா- வினோதனன் ( நீ அல்லவோ எல்லம் அற என்னை இலன்தனால சோலை முருகன் கிருபாபதியே -Nī Allayo - Ellam Ara Ennnai Yilantanala Collai Murukan Curapūpatiye). இதன் அர்த்தம் " ஓ முருகா, தேவர்களின் தலைவனே, நீதானே என்றும் சந்தோஷமாகவும், வருத்தம் இல்லாமலும் இருப்பவர். மாபெரும் யோகி, மற்றவர்களுக்கு நன்மை தருபவர், அன்பானவர், அதிசயமானவர் (மொழி பெயர்ப்பு ஸ்வாமி அன்வானந்தர்?)

  1. ஞாயிற்றுக் கிழமை - மூலாதாரம், திருப்பரம்குன்றம் (உல்லாசா)
  2. திங்கள் கிழமை - ஸவாதிஷ்தானம், திருச்சென்தூர் (நிராகுலா)
  3. செய்வாய் கிழமை - மணிபுரம், திருவாவினக்குடி (யோகா)
  4. புதன் கிழமை - அனாஹதம், ஸ்வாமி மலை (விதா)
  5. வியாழன் கிழமை - விசுதி, திருத்தணி (சல்லாபன்)
  6. வெள்ளிக் கிழமை - அஜ்னா, பழமுதிர் சோலை (விநோதனன்)

அந்த ஆறு படைவீடுகளை குறிக்கும் - திருப்பரம்குன்றம் முதல் வள்ளிமலை வரை- திருப்புகழைப் பாடியவண்ணமே குண்டலினி சக்தியை எழுப்பி ஸ்வாமிகள் மோட்சம் அடைந்தார்.
வள்ளிமலை உச்சி- திர்மால் கிரீஸ்வரா
வள்ளிமலை உச்சி- திர்மால் கிரீஸ்வரா
திருமால் கிரீஸ்வரா மலை உச்சியில் 
இருந்து திருப்புகழ் ஆஸ்ரமம்
திருமால் கிரீஸ்வரா மலை உச்சியில் இருந்து திருப்புகழ் ஆஸ்ரமம்

(1) உன்னை தினமும்
தொழுதேதன் காணதில் என் பயமாற மயில் முதுகில் வருவாயே (பாடல் 26)
திருப்பான்கிரி ஜனியுரை சரவணப் பெருமலர்
unai tinam tolutitan Kanatil in payamara mayil mutukil varauaye (song 26) PTT.
Tiruppankiri Janiurai Saravana Perumalar

(2) முந்து ஜயமில் மாலை கோடி கோடி
சேம்போன் மயில் மீது எப்பிக்குள் வருவாயே (பாடல் 30 – பக்கம் 15)
செந்தில் நகர் வாழும் அம்மைக்காரப் பெருமாளே
Muntu Jamil malai koti koti. Cempon Mayil Mītu yeppiclu Varauaye (page 15, song 30)
Centil nagar Valum Anmaikara Perumālē

(3) சவானார் மனமும் குளிர
ஆடுயெனை அர்கலெனை வரவேணும் (பாடல் 34- பக்கம் 18)
ஜகமேல்மய் கந்தா விரல் பெருமாளே
{3) Swanār manam kulirā Aduyenai Arcalenai Varavenum (page 18 song 34)
jagamelmai kanda viral Perumālē

(4) எந்த பிழையேனும்
சந்த சபை தமிழ் எனத்திரும் உரிக்கவம் வருவாயே (பக்கம் 20)
கந்த பொலில் திகழ் குறுமாலை மயுரப் பெருமாளே
Enta phikayinum Canda capai tamil enatiram urykavam varuvaye (page 20)
Kanta Pholil tikal kurumali maruaiya Perumālē

(5) தராயிட் மனுதார் அகினல்
பாடியதென சமுதி மனோலயம் வந்து தரை (பக்கம் 23)
வனிதமாலை யாவயும் மேவிய தம்பிரானே (பக்கம் 25 பாடல் 45)
Tarayit manutar Acinal - Patiya tana camūti manolayam Vantu Tarai (page 23)
Vatinatamalai yavayum meviya Tampiranai (page 25 song 45)

(6) அகருமாய்
எனது முன்னோடி வரவேணும்
மலை மிகை ஏறிய பெருமானே
Akarumai Enatu munnoti varavēntum
Malai micai meviya Perumālē

(7) கும்பகோணம் உலயெங்கும் மேவிய பெருமாளோ (பக்கம் 27-28)
Kumpakōnam ulayenkum maveya perumālō ('whole world') pp. 27-28

திருவாக்காப்பு என்பதை விரிவாக்கி வேல் காப்பு மற்றும் வேல் மறல் என ஆக்கிய ஸ்வாமிகள் அதில் இருந்த மற்ற காப்புக்களைப் பற்றி கூறினார். அவைகள்: (1) கத கனியால் காப்பு (2) தெவிதீர காண் காப்பு (3) வேல் காப்பு (4) சிர்பாத காப்பு (5) வேல் வாங்கு காப்பு (6) வெடிசி காவலன் காப்பு.

அந்த காப்புக்களைப் படிப்பதால் என்ன பயன் ஏற்படும் என்பதற்கு ஸ்வாமிகள் தான் சொந்த வாழ்வில் கண்ட அனுபவத்தைக் கூறினார். முருகனுடைய சில அம்சங்களை - அதாவது வேல், மயில், பாதம், வள்ளி போன்றவற்றை புகழ்ந்து பாடுவதினால் கிடைக்கும் தெய்வ சக்தியை விவரிக்க இயலாது என்றும், அருணகிரிநாதரினால் மட்டுமே அப்படிப்பட்ட பாடல்களைப் பாட இயலும் எனவும், வள்ளி மற்றும் முருகனின் அருள் இருந்ததினால் மட்டுமே அவற்றை தேவைப்பட்டவர்களுக்கு பிரபலப்படுத்த முடிந்தது என்றும் கூறினார்.

வேல் மாரல் (மை காவல்)

1928 ஆம் ஆண்டில் திரிலோக மந்திரவாதி என்பவன் வள்ளி மலை ஸ்வாமிகள் மீது எதோ சூனிய மந்திரம் வைத்து விட அவரால் பேச முடியாமல் போயிற்று. முருகனின் அருளினால் அவருக்கு வேல் காப்பு மனதில் பதிந்து இருந்ததினால் அந்த 64 வரிகளையும் வேறு வகையில் 16 வரிகளாக மாற்றி உச்சரிக்க மந்திரவாதியின் மந்திரம் எடுபடாமல் போயிற்று. மந்திரவாதியின் உடல் முழுவதும் நெருப்பு சுடுவது போல உணரத் துவங்க, அவன் ஸ்வாமிகளிடம் ஓடி வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு இனி அப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன் என உறுதி தந்தான்.

அதன் மூலம் வேல்மராலின் மகத்துவம் பற்றி புரிய வந்தது. இன்றும் கூட பலரும் வேல்மராலை உச்சரித்தவண்ணம் பெரும் பயன் அடைகிறார்கள்.

தேவீந்திர கன்கு வகாப்பு

இந்த வகாப்பு மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதுதான் - 16 அட்சரங்களைக் கொண்டசோடாக்ஷரி மந்திர தேவி வள்ளியை அணுக முடியும் என்பது ஸ்வாமிகளின் கருத்து. இந்த மந்திரத்தை முறைப்படி செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

திருப்புகழ் பாராயண தயனேறி திருமுறை

இதை உச்சாடனம் செய்யும் பொழுது மன அமைதி கிட்டி மோட்சம் கிடைக்கும் என்பதற்கான வழியில் ஸ்வாமிகளால் இயற்றப்பட்டு உள்ளது.

திருப்புகழ் ஞான சச்சிதானந்த வள்ளி சரித்திரம்

இது ஸ்ரீ வள்ளியின் ஜீவ பிரம்ய இயக்கம் என்பதைத் தழுவி இயற்றப்பட்டு உள்ளது (பரமாத்மாவான முருகனுடன் அனைத்து ஜீவாத்மாக்களும் கலப்பது). முருகனிடம் நாம் செய்து விட்ட தவறுகளைக் கூறி விட்டு இதன் ஒவ் ஒரு வரியைப் பாடியும் அவர் பாதங்களைத் தொழ வேண்டும். ஒவ்ஒரு வருடமும் டிஸம்பர் மாதம் 31 ஆம் தேதி தணிகேசனிடம் சென்று அவரிடம் அதைப் பாடி, அவரிடம் மன்னிப்புக் கேட்டப் பின் வீடு திரும்ப, மனதில் உள்ள குற்ற உணர்வு குறையும்.

ஸ்வாமிகளுக்கு தணிகேசனிடம் தனிப் பிரியம் உண்டு. 1950 ஆம் ஆண்டு ஸ்வாமிகள் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சமாதி அடைந்த பொழுது, அவர் உயிர் நெற்றிப் பொட்டில் இருந்து வெளியேறிற்று. முருகன் வள்ளியை மூன்று விதங்களில் சோதனை செய்தார். (1) குடும்ப வாழ்க்கை (2) நகை, அணிகலன்கள் மீதான ஆசை (3) புராணங்களைப் படிப்பது, கைரேகை பார்ப்பது போன்றவை. ஆனால் அவளுக்கு எதிலும் நாட்டம் ஏற்படவில்லை. அவள் நினைவு முழுவதிலும் முருகப் பெருமானே நிறைந்து இருந்தார் என்பதினால் அவள் சன்மார்கத்தை அடைந்தாள் {ஜீவபிராம்மியக்கம் - jīva-BrahmĀ ikyam)
வள்ளிமலை பொங்கி தேவி
வள்ளிமலை பொங்கி தேவி

வள்ளி மலை

வுள்ளி மலையில் அவர் விவசாயிகள், கிராமிய மக்கள் மற்றும் பெரிய வித்வான்கள் என ஜாதி பேதம் இன்றி அனைவரையும் தன்னிடம் இழுத்தார். ஏழு வயதான வேடவப் பெண் ஒருவள் அவர்களில் முக்கியமானவள். ஆவள் பெயரும் வள்ளி என்பதே. அவள் அருமையாக திருப்புகழ் பாடல்களைப் பாடுவாள். அது போலவே பிறவிக் குருடனான பதினோறு வயது சிறுவனும் ஸ்வாமிகளிடம் நன்கு பயிற்சி பெற்றுப் பாடினான். அவனுக்கு கண்ணப்ப பாகவதர் என்ற பெயரை ஸ்வாமிகள் சூட்டினார்.

ஸ்வாமிகள் உயிருடன் இருந்த பொழுது அவரிடம் ஜடி வாத்தியம் என்ற இசைக் கருவியை உபயோகிக்க எனக்கு வாய்ப்பு கிட்டியது. நான்கு நாண்களைக் கொண்ட அந்த வாத்தியத்தை இசைத்தபடியே திருப்புகழை ஸ்வாமிகள் பாடும் பொழுது அற்புதமாக இருந்தது. பல சமயங்களில் அந்த வாத்தியக் கருவி காணாமல் போய்விடுமாம். ஏன் எனில் அதை ஸ்ரீ வள்ளியே எடுத்துப் போய் வாசிப்பது உண்டாம். அதனால் அந்த இசைக்கருவிக்கு - ஒரு தடித்த மற்றும் மெல்லிய கட்டையுடன் வாசிப்பது - அவர் 'பொங்கி வாத்தியம்' என்று பெயரிட்டு இருந்தார்.

ஒரு முறை மிகவும் வேடிக்கையான சம்பவம் நடந்தது. ஒரு ஆண்டி, வக்கீல் மற்றும் தொழில் அதிபர் என மூன்று பேர் ஸ்வாமிகள் 'இரும்பைப் பொன் ஆக்குவதாக' பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்று காப்பி பானம் (அந்த வள்ளி மலை உச்சியில் அப்போது கிடைக்காதது) கொடுத்து உபசரித்தார்.

அவர்கள் தாங்கள் கேள்விப்பட்டதை ஸ்வாமிகளிடம் கூறி விளக்கம் கேட்க, அவர் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் இருந்த சிட்டு காப்பு என்பதில் அது குறித்த விளக்கம் உள்ளதாகவும் ஆனால் அதில் கூறப்பட்டு உள்ள பொருட்களை மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும் எனக் கூறினார். அதை தேடிக் கண்டுபிடிக்கையிலும் உபயோகப் படுத்துகையிலும் இடையில் ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால் கூட அதுவரை செய்த அத்தனை முயற்சிகளும், பணமும் விரையமாகிவிடும் என்றும், அப்படி சிரமப்பட்டு அதைப் பெறுவதை விட முருகனின் பாதங்களை நினைத்து பூஜித்தால் வாழ்வில் அதை விடப் பெரும் பயன் கிட்டும் என்றார்.

வள்ளி மலையில் அப்படி அவருடைய உபதேசம் பெற்றுச் சென்றவர்கள் மாபெரும் மாறுதலை தம்மிடம் ஏற்பட்டதைக் கண்டனர். அதில் இருந்தவர்களில் ஒருவரான ஸ்வாமி அன்வானந்தவின் கனவில் தோன்றிய வள்ளி, சென்னையில் தனக்கு ஸ்ரீ வைஷ்ணவி என்ற பெயரில் ஒரு ஆலயம் எழுப்புமாறு ஆணையிட்டாள். அவரும் அதன்படி 1954 ஆம் ஆண்டு சென்னையில் வல்லிக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்.
ஸ்வாமி அன்வானந்தாஜி

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் திரு கிருஷ்ண ஐயர் 
வருடாந்திர திருப்புகழ் விழாவில் ஸ்ரீ வைஷ்ணவிக்கு 
ஆரத்தி எடுக்கும் காட்சி . ஏப்ரல் 2000

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் திரு கிருஷ்ண ஐயர் வருடாந்திர திருப்புகழ் விழாவில் ஸ்ரீ வைஷ்ணவிக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி . ஏப்ரல் 2000

ஸவாமிகள் சமாதி அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் அதாவது 12.1.1950 அன்று திவின்திர கன்பு வகாப்பு (Tēvēntira Canku Vakuppu) என்ற முறையில் அமைந்து இருந்த திருப்புகழ் பாடலைப் பாடியபடியே அங்கிருந்த வைஷ்ணவதேவி சிலைக்குள் தன்னுடைய சக்தி முழுவதையும் மாற்றினார். திருமுல்லைவாயிலில் உள்ள அந்த தேவி ஆலயம் இன்றும் பெரும் திரளான பக்தர்களைத் தன்பால் இழுக்கின்றது. பக்தர்களுக்கு அந்த தேவி மூலம் ஸ்வாமிகளுடைய அருளும் ஆசியும் கிட்டி வருகின்றது. அவர் சமாதி அடையும் சில மாதங்களுக்கு முன்பாக இரமண மகரிஷி சமாதி அடைந்ததைக் காண வேண்டிய பாக்கியம் கிட்டியது. 14.4.1950 அன்று இரமண மகரிஷி சமாதி எய்தினாலும் அவர் பளீர் என வானில் மினுக்கும் ஒரு நட்சத்திர உருவில்தான் இன்னமும் இருப்பதாக கூறுகிறார்கள்.

1950 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் வள்ளி மலைக்கச் சென்று திரும்பினேன். அதன் முக்கியத்துவம் பிறகுதான் எனக்குப் புரிந்தது. 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்வாமிகள் சென்னையில் தம்பு செட்டித் தெருவில் கந்தர் சஷ்டி ஹோமம் ஒன்றை நடத்தினார். அதில் நானும் பங்கு ஏற்றேன்.

ஐந்தாம் நாள் அன்று வள்ளி சன்மார்கம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்து கொண்டிருந்த ஸ்வாமிகளினால் இடையே சில நிமிடங்கள் பேச முடியாமல் போய் விட்டது. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அதற்குப் பின் சில மணி நேரம் பொறுத்து என்னிடம் பேசியவர் அந்த உபன்யாசத்தின் பொழுது தனக்கு முருகன் நேரில் காட்சி தந்தார் எனவும் அதனால்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது எனவும் கூறினார். அதன் பின் 12 வது நாள் (1950 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி) மாலை சுமார் நான்கு மணி அளவில் நெற்றிப் பொட்டின் நடுவில் ( அஜ்ன சக்ரம் ) ஏற்பட்ட இரத்தக் கசிவு தோன்ற, ஸ்வாமிகள் சமாதி அடைந்தார்.

ஐந்தாம் நாள் அன்று வள்ளி சன்மார்கம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்து கொண்டிருந்த ஸ்வாமிகளினால் இடையே சில நிமிடங்கள் பேச முடியாமல் போய் விட்டது. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அதற்குப் பின் சில மணி நேரம் பொறுத்து என்னிடம் பேசியவர் அந்த உபன்யாசத்தின் பொழுது தனக்கு முருகன் நேரில் காட்சி தந்தார் எனவும் அதனால்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது எனவும் கூறினார். அதன் பின் 12 வது நாள் (1950 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி) மாலை சுமார் நான்கு மணி அளவில் நெற்றிப் பொட்டின் நடுவில் ( அஜ்ன சக்ரம் ) ஏற்பட்ட இரத்தக் கசிவு தோன்ற, ஸ்வாமிகள் சமாதி அடைந்தார்.

ஸ்வாமி ஸ்ரீ அன்வானந்தாவின் உதவியுடன் நான் சமாதி அடைந்த ஸ்வாமிகளுடைய உடலை வள்ளி மலைப் பகுதியில் இருந்த குகை ஒன்றில் (அவர் சமாதி அடைவதற்கு பல நாட்களுக்கு முன்னரே தன்னுடைய சமாதி நிலைக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில்) எடுத்துச் சென்று சமாதி செய்தோம். ஸ்வாமிகளுடன் இரமண மகரிஷி சமாதி அடைந்த பொழுது நானும் அங்கு சென்றிருந்ததினால் சமாதி அடைந்தவர்களுக்கு எப்படி இறுதிக் காரியங்கள் செய்ய வேண்டும் என எனக்குத் தெரிந்து இருந்தது. அதற்கு முன்னர் மௌன குருஸ்வாமி அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்து இருந்தார். கடந்த 17 வருடமாக அவர்தான் அந்த சமாதியை பாதுகாத்து வருகின்றார்.

நான் என்னதான் எழுதினாலும் அது ஸ்வாமிகளுடைய மகிமைகளை முழுவதும் கூறியதாகாது. இரண்டு வருட காலம் அவருடன் இருந்து பணி செய்து கொண்டு இருந்த எனக்கு அவருடைய பரிபூரண அருளும் ஆசியும் கிடைத்தது என் பாக்கியமே.


1912 ஆம் ஆண்டு பிறந்த, பழையனூர் சுப்ரமணிய கிருஷ்ண ஐயர் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமி சச்சிதானந்த திருப்புகழ் சபாவின் தலைவர். மேலும் திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி ஆலயத்தின் பொருளாளர். அவர் ரமண மகரிஷி மற்றும் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமி சச்சிதானந்தா போன்றவர்களுடன் நேரடியாக நெருங்கிப் பழகியவர். மேலும் விவரம் அறிய வல்லிமலை ஆலய அதிகாரபூர்வ இணைய தளத்துக்குச் செல்லவும்.

For more information, visit the Valli Malai official website

Note : Tiruppukal Parāyana
1996. available at Sabha Premises
141 Dinya Chetty St.
Chennai 600 001


Index of research articles on Skanda-Murukan
Valli Malai home page | home