Lord Skanda-Murugan
 

பண்டைய வட நாட்டில் ஸ்கந்த குமார

கார்த்திகேயர்
கார்த்திகேயர்

ஆர். கே. சேத்

Original article in English: "Skanda Kumāra in ancient North India" by R.K. Seth

ஸ்கந்தன் அல்லது சுப்பிரமணியர் என்பவரைப் பற்றி அநேகமாக அனைத்து சமிஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றுக்களிலும் அவர் இந்திய தெய்வங்களில் ஒரு முக்கியமான கடவுள் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளன. பரிபாடல் எழுதிய புலவர் அனைவருக்கும் ஸ்கந்தனின் புராணக் கதை தெரிந்து உள்ளது. சிவப்புக் கடவுள் எனப்படும் தமிழ் கடவுள், ரத்தினம் போன்ற சேவல் கொடியை கையில் ஏந்தி, மயில் மீது அமர்ந்து கொண்டு தேவர்களின் படைத் தலைவராகக் காட்சி அளிக்கின்றார். திருமுருகாற்றுப் படையில் அவர் ஹிமாவத்தின் குழந்தை, இந்த பூமிக்கு அக்னியால் கொண்டு வரப்பட்டவர், ஆறு கிருத்திகைகளினால் வளர்க்கப்பட்டவர், மற்றும் அசுரர்களை அழித்தவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேன்மையான எண்ணத்துடன் ஆன்மீக முறையில் கடவுளின் மாயையை அறிய முற்பட்ட ஞானி அருணகிரிநாதர், இறைவன் புகழ்ப் பாடல் பாடிய குமார குருபரர் மற்றும் ராமலிங்க ஸ்வாமி எனப்பட்ட துறவி போன்ற அனைவருமே அருள் மழை பொழியும், என்றும் உதவிடும் கருணைக் கடவுளாக இந்தக் கடவுளை போற்றி அவரை துதித்துப் பாடி உள்ளார்கள். திருமுருகாற்றுப் படை இயற்றப்பட்ட காலத்திலேயே தென் இந்தியப் பகுதி முழுவதிலுமே முருக வழிபாட்டு மரபு இருந்துள்ளது. பிராமணர்களைப் பொறுத்தவரை அவர் தியாகத்தை பிரதிபலித்தவர், படைத் தலைவர்களுக்கு அவர் தீரத்தைப் பிரதிபலித்தவர், ரிஷி முனிவர்களுக்கு எளிமையாக தியானிக்க முடிந்தவர் மற்றும் அனைத்தையும் ஒன்றிணைத்து ஞானத்தை தருபவர் என்ற கருத்து உண்டு. ஆகவே முருகன் எனப்பட்டவர் அழிவற்ற இளமை மற்றும் மன விடுதலை தரும் மூல ஆதாரமாக உள்ளவர் என்பது தெரிகிறது.

உபநிஷத், பிராமணர்கள் மற்றும் சூத்திரங்களின் பார்வையில் ஸ்கந்தன்

சாண்டோக்ய உபநிஷத் (ca. 7th Century B.C.) என்ற நூல் வேத முனிவரான ஸ்கந்தகுமாரராக முருகனைக் கருதுகிறது. அவரைக் குறித்து 'தம் ஸ்கந்த இத்யசக்ஸ்யதே' (7.26.2) என்கின்றது. சாண்டோக்ய உபநிஷத் தோன்றியபோது ஸ்கந்தன் யுத்தக் கடவுளாக பார்க்கப்படவில்லை. மாறாக அவர் தனித் தெய்வமாகவே ஏற்கப்பட்டு இருந்திருந்தார். மாறாக ஸ்கந்தன் சமய போதனையாளராகவே கருதப்பட்டார். சனத்குமாரருடன் அவரை இணைத்துக் கூறியதைக் குறித்து எம்.முகோபாத்யாயா என்பவர் எழுதினர் '' உபநிஷத போதனைகளை வடிவமைத்ததில் ஷத்ரியர்களின் செல்வாக்கு இருந்தது. ஷத்ரியர்களின் அனுதாபத்தையும் பரிவையும் பெறுவதற்காக பிராமணர்கள் தம்மிடம் பெற்றிருந்த இருந்த ஞானத்தை ஷத்ரிய தலைவர்களிடமும் ரகசியமாக பகிர்ந்து கொண்டார்கள். இந்த பின்னணியில் இருந்து பார்க்கும்போது சனத்குமாரனை தேவர்களின் படைத்தலைவரான ஸ்கந்தனுடன் இணைத்துக் கூறியது வியப்புக்கு உரியது அல்ல 1.

stone icon of Karttikeya from ancient North India, 7th century AD

சிகாகோ மியூசியம் ஆப் ஆர்ட் என்பதில் காணப்படும் 7 ழாம் நூற்றாண்டை சேர்ந்த கார்த்திகேயர் மணற்பாறை சிலை. இது இந்தியாவில் வடநாட்டில் கிடைத்தது.
stone Karttikeya icon: Vardhana, 7th cent. AD, North India

7 ழாம் நூற்றாண்டை சேர்ந்த கார்த்திகேய வர்தானா மணற்பாறை சிலை. உயரம் 47 சென்டிமீட்டர்

சிகாகோ மியூசியம் ஆப் ஆர்ட் என்பதில் காணப்படும் 7 ழாம் நூற்றாண்டை சேர்ந்த இன்னொரு கார்த்திகேயர் மணற்பாறை சிலை. இது இந்தியாவில் வடநாட்டில் கிடைத்தது.

எஸ். எஸ். ராணா 'ஒரே தந்தையின் குழந்தைகள் அதாவது சனத்குமாரரும் பிரும்மாவின் பிள்ளை, ஸ்கந்தரும் பிரும்மாவின் பிள்ளை, மற்றும் அவர்கள் இவருடைய செயல்பாடுகளும் ஒன்று போலவே இருந்துள்ளது' என்பவை போன்றவற்றினால்தான் சாண்டோக்ய உபநிஷத் என்ற நூல் இருவரையும் ஒருவரே எனக் கருதி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றார். 2 ரிக் வேதக் கடவுளான அக்னியின் ஒரு தன்மையை குமாரா பிரதிபலிப்பதாக சத்பாத பிராம்மணா என்ற நூல் கருதிற்று. அதர்வண வேதத்தின் பரிசிஸ்தா என்பதின் உரை மூலமான ஸ்கந்தயாகா என்பது வெளியானபோது ஸ்கந்தனுக்கும் மயிலுக்கும் உள்ள தொடர்ப்பு வெளியாயிற்று. 3 அவருடைய தோற்றத்தில் கிண்கிணி மாலையும், கொடியும் இருந்ததாக கூறப்பட்டது. 4 அவரை சுற்றி தாய்மார்கள் இருந்தார்கள். 5 சிவன், அக்னி மற்றும் கிருத்திகைகள் அவருடைய பெற்றோர்கள் எனக் கூறப்பட்டார்கள். 6

ஸ்கந்தனை அக்னி, கிருத்திகைகள், பசுபதி மற்றும் ருத்ராவுடன் ஒன்றிணைத்துக் கூறப்பட்டாலும் ரிஷிகள் கூறினார்கள் நீ யாராக இருந்தாலும், நான் உன்னை வணங்குகிறேன். 7 பௌத்தயானா தர்மசூத்ராவில் ஷண்முகா, ஜெயந்த், விசாகா, மஹாசேனா போன்றப் பெயர்கள் ச்கந்தனைக் குறிப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளன. யாகங்களில் அவருக்கு ஆவுதிகளாக படைக்கப்பட்ட பிரசாதங்களை போட்ட பிரசாதிகள் அவரை யுத்தக் கடவுளாகவே கருதி உள்ளார்கள். 8 இப்படியாக செய்யப்பட்ட சடங்குகள் மற்றும் ஆவுதிகள் போன்றவற்றைப் பற்றி கதாக்கிரையசூத்ரா மற்றும் அக்னிவேஷ கிரையசூத்ரா போன்றவற்றில் கூறப்பட்டு உள்ளது. மேலும் பல சூத்ர இல்லக்கியங்களிலும் ஸ்கந்த குமாரா மீதான கட்டுக் கதை அப்பொழுதே விளங்கி இருந்ததாகவும், அவர் மிகவும் புகழ் பெற்ற கடவுளாக இருந்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. சிவன், ஸ்கந்தன் மற்றும் விசாகா போன்றவர்களின் உருவ வர்ணனையை பாணினி சூத்ரா 99 என்பதின் மூலம் பதஞ்சலி எடுத்துக் காட்டி உள்ளார். சாம்ராடிபுகர்த்தா என்ற சொற்றொடர் அந்தக் கடவுட்கள் வழிபடப்பட்ட விவரத்தை கூறுகிறது. அரசு கஜானாவை மீண்டும் நிரப்பிக் கொள்வதற்காக இந்தக் கடவுட்களின் மேன்மைகளை மௌரிய மன்னர்கள் பரப்பினார்கள். (A.K. Chatterjee p. 29) 9 ஸ்கந்தனை இந்திரன் வஜ்ராவினால் தாக்கியபோது ஸ்கந்தனின் வலது பக்க உடலில் இருந்து விசாகா வெளி வந்தார் என்றும், ஸ்கந்தா மற்றும் விசாகா இருவரும் தனித் தனி உருவங்களைக் கொண்டவர்கள் என்றும் பதஞ்சலி மூலம் அறிய முடிகிறது.

ஏ. கே. சாட்டர்ஜி என்பவர் புத்தர் காலத்திலும் (6th Cent. BC) கூட ஸ்கந்தன் கடவுளாக வழிபடப்பட்டார் என்பதைக் குறித்த சில குறிப்புக்களை தந்துள்ளார். 10 கௌடல்யா ஸ்கந்தனை சேனாபதி அதாவது தேவலோக தேவர்களின் அனைத்துப் படைகளின் படைத் தலைவர் என்று குறிப்பிட்டு உள்ளார். 11 கௌடல்யாவின் காலத்தில் பல இடங்களிலும் கார்திகேயரின் ஆலயங்கள் இருந்துள்ளன என்பது தெரிகின்றது.

மகாபாரதத்தில் ஸ்கந்த முருகன்

மகாபாரதத்தின் பதினாறாம் காண்டம் ஸ்கந்த முருகனைக் குறித்து கூறி உள்ளது. வன பர்வாவின் பத்து அத்தியாயங்கள், சால்ய பர்வாவின் மூன்று அத்யாயங்கள் மற்றும் அனுசாசன பர்வாவில் மூன்று அத்யாயங்கள் போன்றவை ஸ்கந்தனின் பிறப்பைக் குறித்தும் அவருடைய சூரத்தனங்களைக் குறித்தும் கூறி உள்ளன. மகாபாரதத்தில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறப்பட்டு உள்ள புராணக் கதையில் அவருடைய வளர்ச்சி வெளிப்படுகின்றது. வன பர்வாவில் ஸ்கந்தன் அக்னி மற்றும் ஸ்வாகாவின் குழந்தை என்று கூறப்பட்டு உள்ளது. அக்னி சூரியனுடன் சம்மந்தப்பட்டவர் என்பது உண்மை. ஸ்கந்தன் தன்னுடைய தீரத்தை வெளிப்படுத்தியதைக் கண்ட தேவர்கள், இந்திரனை உசுப்பி விட, முதலில் தயங்கிய இந்திரனும் கார்திகேயருடன் யுத்தத்திற்கு தயார் ஆனார். அதில் இந்திரன் முழுமையாக தோற்கடிக்கப்பட்டார். இந்திரன் ஏவிய வஜ்ராயுதம் ஸ்கந்தனின் வலது பக்கத்தை தாக்கி அவரது உடலில் புகுந்தது. அப்போது ஸ்கந்தனின் வலது பக்கத்தில் இருந்து விசாகா எனும் புதியக் கடவுள் வெளி வந்தார்.

யுத்தத்தில் முழுமையாக தோற்றுப் போன இந்திரனும், ஸ்கந்தனிடம் தேவர்களின் மன்னனாக முடி சூட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள, அதை கண்ணியமாக மறுத்து விட்ட கார்த்திகேயர் தேவர்களின் அனைத்துப் படைகளுக்கும் முதன்மை தலைவராக பதவி ஏற்க சம்மதித்தார். இதில் இருந்தே ஸ்கந்தனின் சக்தியும், அவருக்கு இருந்த அந்தஸ்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். ஆகவேதான் ஸ்கந்தன் கடவுட்களில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானத்தைப் பெற்றார். சால்ய பர்வாவில் ஸ்கந்தன் தன்னுடைய தாயார்கள் மீது வைத்து இருந்த நெருங்கிய உறவு பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏ. கே. சாட்டர்ஜி 'மொஹெஞ்சதாரோவில் அந்த காலத்தில் இருந்த தாய் வழிபாட்டு மரபும் ' இதுவும் ஒன்றுடன் ஒன்று தொடர்ப்பு உள்ளதைப் போலக் கூறி உள்ளார். சில இடங்களில் ஸ்கந்தனை யோகீஸ்வரா என்றும், மகா யோகி என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். இதுவே பின்னர் புராணங்களில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

மகாபாரதத்தில் ருத்ரா, அக்னி, உமா மற்றும் கங்கை போன்றவர்கள் குமாரக் கடவுளை தேவலோகப் படைகளின் தலைவராக முடிசூட்டும் சடங்கை சரஸ்வதி நதியின் கரையில் செய்திடுமாறு பிரும்மாவிடம் கேட்டுக் கொண்டார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்தா அப்போது நான்கு உருவங்களைக் கொண்டார்- சாகா, விசாகா, நைகமேயா மற்றும் ஸ்கந்தா என்பனவே அவை. சாகா கங்கையிடம் செல்ல, நைகமேயா அக்னியிடமும், விசாகா பார்வதியிடமும் செல்ல, ஸ்கந்தன் ருத்ராவிடம் சென்றார். குமரனை தத்தம் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிய நால்வரும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நிறைய ஆயுதங்களை பரிசாகப் பெற்ற ஸ்கந்தன் அசுரர்களை வதம் செய்தார். தாரகாவும், அவனுடைய மஹிஷாவும் அழிக்கப்பட்டார்கள். தைத்ய பானா என்பவன் குறுன்சா மலையில் சென்று ஒளிந்து கொள்ள அதையும் ஸ்கந்தன் தனது ஆயுதத்தினால் பிளந்திட அவனும் மடிந்தான். அவருடைய வெற்றியை அனைவரும் பாராட்டினார்கள். சிலர் அவரை மகேஸ்வராவின் மகன் என்றும், மற்ற சிலரோ அவரை பார்வதி, அக்னி மற்றும் கிருத்திகைகளின் மகன் என்று குறிப்பிடுகிறார்கள்.

ராமாயணத்தில் ஸ்கந்த கார்த்திகேயா

ராமாயணத்தில் பால காண்டத்தில் ஸ்கந்தனின் பிறப்பில் அக்னி பகவானின் பங்கைக் குறிப்பிட்டு உள்ளது. ராமாயணத்தின் ஒரு பதிப்பில் ஸ்கந்தனை சிவபெருமானின் புதல்வர் என்று கூறினாலும், அதில் அக்னியின் பங்கையும் குறிப்பிட்டு உள்ளது. கார்த்திகேயா என்ற பெயர் பெற்றதின் காரணம் கிருத்திகைகள் என்பது அனைவருக்கும் தெரியும். ராமன் காட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு பாதுகாப்புடன் இருக்க ஸ்கந்தனின் அருளை கௌசல்யா வேண்டுகிறாள்12. அகஸ்தியரின் குடிலில் இருந்த பூஜை அறையில் கார்த்திகேயர் மற்றும் பிற கடவுட்களும் பூஜிக்கப்பட்டதான குறிப்பும் உள்ளது 13. மேலும் ஸ்கந்தன் ஒரு மாவீரர், மஹாசேனா, அவருடைய ஆயுதம் சக்தி, வாஹனம் மயில், அவருடைய பெயர் குஹா மற்றும் குறுன்சா மலையை உடைத்தது போன்ற குறிப்புக்கள் வால்மீகி ராமாயணத்தில் காணப்படுகிறது.

புராணங்களில் ஸ்கந்த கார்த்திகேயா

பல புராணங்களின் பல இடங்களிலும் ஸ்கந்த கார்திகேயரின் பிறப்பு மற்றும் பிற தன்மைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. ராமாயணத்தில் காணப்ப்படும் செய்திகளைப் போலவே முருகனின் பிறப்பு மற்றும் வீரத்தனங்களை வாயு புராணமும் (350 BC - 550 AD) கூறி உள்ளது. ஸ்கந்தன் ஸ்வாஹாவினால் அக்னிக்குப் பிறந்த புதல்வர் (1.8.11) என்று மகாபாரத வன பர்வாவில் கூறப்பட்டு உள்ளதை வாயு புராணம் ஆமோதித்து உள்ளது. மிகப் பழமையானதும், ஆனால் வாயு புராணத்துக்கு பிற்பட்டதுமான பிரம்மாண்ட புராணத்திலும் ஸ்கந்தனைப் பற்றிய செய்தி வாயு புராணச் செய்தியை ஒத்து உள்ளது.

மத்சைய புராணத்திலும் (Chapters 158-160) ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள ஸ்கந்தனின் பிறப்பின் செய்தியை மிகப்படுத்தி விவரித்து உள்ளது. சிவனின் விந்துவை முழுங்கிய அக்னி, மற்றும் மற்ற கடவுட்களின் உடலில் இருந்து வெளியுற்று விழுந்து குளமான தங்கக் குளத்தில் பார்வதி குளித்துக் கொண்டு இருந்தபோது, கிருத்திகைகள் பார்வதிக்கு குடிக்கத் தண்ணீரை தந்தார்கள். அந்த நீரைக் குடித்த பார்வதியின் வலது பக்கத்தில் இருந்து வெளிவர இருந்த குழந்தையின் ஜொலிக்கும் உடல் மூன்று லோகங்களும் பிராகாசிக்கும் விதத்தில் இருக்கும் என்று கிருத்திகைகள் எதிர்பார்த்தார்கள்.

வாமன புராணம் வெளியான நேரத்தில் அக்னியால் ஸ்கந்தன் பிறந்தாலும், அவருடைய தாயார் ஹிமாவனின் இன்னொரு மகளாகப் பிறந்து விட்டாள் என்று கூறப்பட்டு உள்ள கதை வேறு எந்தப் புராணத்திலும் காணப்படவில்லை. வராஹா புராணத்தில் ஸ்கந்தனின் பிறப்புக் குறித்து தத்துவார்த்த விளக்கம் தரப்பட்டு உள்ளது. அதை எழுதி உள்ள புலவர் ஸ்கந்தனின் பல்வேறு முன்பிறவி அவதாரங்களை அறிந்திருந்தார். 14

உமா எனப்படும் ப்ரகிர்தி மற்றும் சிவன் எனப்படும் புருஷரின் உறவில் பிறந்தவரே அஹம்காரா என்ற உயர் தத்துவ பிள்ளை (Param tattva). (Varah 25.1-5).

பிரும்மைவவார்த்தப் புராணத்தில் ஸ்கந்தனை விஷ்ணுவுடன் ஒப்பிடுகிறார்கள். பாகவத புராணா மற்றும் விஷ்ணுதர்மோத்தார புராணாவும் (III.71.7) குமார கார்த்திகேயா என்பவர் அசுரர்களை அழிக்கவும் அதற்காக தேவர்களின் படைத் தலைவராக இருக்கவும் விஷ்ணு எடுத்த அவதாரமே என்கின்றன 15. பல்வேறு சமப் பிரிவுகளின் கருத்துக்களின் முரண்பாடுகளை அகற்றவே அப்படி எழுதப்பட்டு உள்ளது. அதன் பின்னர் மாயா எனும் விஷ்ணுவுடன் அடையாளம் காட்டப்படும் பார்வதியே (Brahmāvaivarta Purāna III. 15.34) கார்த்திகேயரின் தாயார் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஸ்கந்தா என்பவரும் சனத்குமாரரும் ஒன்று என்பது போல கருதும் சாண்டோக்ய உபநிஷத் அவரை மிக சிறந்த பயிற்றுவிப்பாளர் என்றுக் கூறி தர்மத்தை சிறப்பாக அறிந்தவர்களில் அவரே சிறப்பானவர் என்று அவர் பண்பைக் எடுத்துக் காட்டி உள்ளது (Matsya Purāna 184.2-4). அவர் மகாதேவரின் ரகசியத்தை ரிஷிகளுக்கு எடுத்துரைத்ததாகவும், ஸ்கந்தனுக்கு இருந்த ஞானத்தின் மேன்மையைக் குறித்து சிவபெருமானே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளது 16. மகாபாரதத்தில் (IX.46.14) கார்த்திகேயர் ஒரு யோகீஸ்வரர் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த அம்சம் தொடர்ந்து ஒப்புக் கொள்ளப்படுகிறது. பல புராணங்களும் ஸ்கந்தன் ஒரு யோகி என்பதைக் குறித்து குறிப்புக்களைக் கொண்டுள்ளது. பிரும்மைவவார்த்தாவில் ஸ்கந்தனை வளர்த்த கிருத்திகைகள் யோகினிகள் என்றும் பிரகதியின் கலசங்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது (III.15.36). ஸ்கந்தனை யோகி என்றும் யோகிகளின் ஆசான் என்றும் கூறப்படுவதின் காரணம் அவர் யோகியான சிவபெருமானின் மகன் என்பதினால்தான். நமது அறிவெல்லைகளைக் கடந்த தெய்வீகமான சிவனின் சக்தியும், பார்வதியின் பெண் சக்தியும் அக்னி முழுங்கிய பொருளாக வெளி வந்தது என்று மறைபொருளுடன் உரையாகவும் கூறுகிறார்கள்.

வீ. எஸ். அகர்வாலா என்பவர் கூறினார் ' கங்கை தன்னிடத்தில் இருந்து அதை நாணல் புதரில் தள்ளியது. அது சஹாஸ்ராரா போன்ற ஒரு உடலைப் போன்றது. சரியாக கூற வேண்டுமானால் அது பல்லாயிரக்கணக்கான நாணலைக் கொண்ட இருப்பிடம். இந்த பரப்பில் உள்ள ஒவ்வொரு நாணலும், எல்லையற்ற பெரும் பரப்புப் போன்ற மனதில் நிலையாக குடி கொண்டு உள்ள ஒரு நாணலின் இழைப் போன்றது. 17

கார்திகேயரை அடிக்கடி சூரியனுடனும் ஒப்பிடுவார்கள். பண்டையக் கால வேத இலக்கியங்களில் அக்னியை சூரியனுடன் ஒப்பிட்டு, சூரியன் அக்னியின் இன்னொரு அம்சம் என்பார்கள். ஆரம்பம் முதலேயே அக்னியுடன் ஸ்கந்தனை சம்மந்தப்படுத்திப் பேசி உள்ளார்கள். ஆகவே ஸ்கந்தனை சூரியனுடன் ஒப்பிட்டுப் பேசுவது இயற்கையே. வாயு புராணத்தில் ஸ்கந்தனைக் குறித்து இப்படியாக கூறி உள்ளார்கள். 'ஆதித்யசாதசங்கஸ்சோ மகாதேஜாஹ் பிரதப்வான்'. அவருடைய பட்டப் பெயர்' துவாதஸ் அர்கப்பிரதப்வான்' என்பதாக பிரும்மாண்ட புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

மகன், சூரியன் மற்றும் மாவீரன் - பண்புகள்

மகன், சூரியன் மற்றும் மாவீரன் போன்றப் பண்புகளைக் குறித்து விவரமாக எழுதப்பட்டு உள்ளது. கிளோதி:- மகன் என்பது ஒரு ஜடப்பொருளான உடலுடன் வெளி வரும் உயிர் அல்ல. ஒரு மகனின் பாத்திரம் என்ன என்றால், ஒரு தந்தை எனப்படுபவரின் மன அலைகளுக்கு உயிர் அல்லது வடிவம் கொடுப்பது' என்பதே . ப்ரிராதாரனாயக உபநிஷத் என்பதில் ' ஒரு மகனை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொட்டப்பட்டுள்ள தந்தையின் எண்ணத்தை முழுமையாக நிறைவேற்றி அதை ஜடப்பொருளால் வெளிப்படுத்துவதே ஒரு மகன் எனும் பிறவி'.

அது போல மாவீரன் என்ற சொல் வேத இந்திரன், அக்னி மற்றும் ருத்ரனைக் குறிக்கும். தர்மத்தை நிலை நாட்டுபவரே மாவீரன். ஒரு அகண்டத்தின் தன்மையைக் காப்பாற்ற அதில் இருந்து வெளிப்படும் தீமைகளை அழித்து, பழைய தன்மைகளைக் காப்பாற்றியும், அதே சமயத்தில் புதிய நிலையை துவக்கி வைப்பவருமே ஒரு மாவீரன் என்பவர் ஆவார். காரணானுமானங்கள் மற்றும் புராணத் தன்மைகள் போன்ற அனைத்துமே தெளிவற்ற காலவரிசையில் பாதுகாக்கப்பட்டு வந்திருந்தாலும், ஸ்கந்த புராணமோ வேத கால புராணத் தன்மைகளுடனேயே ஒத்து உள்ள வகையில் அமைந்துள்ளது. மாவீரன் என்ற சொல் வேத இந்திரன், அக்னி மற்றும் ருத்ரனைக் குறிக்கும். அது போலவேதான் அந்த மூவரையும் ஸ்கந்தனுடன் இணைத்து உள்ள வகையிலேயே கூறப்பட்டு உள்ளன.

ஸ்கந்தனை ஒரு ஆரியக் கடவுளாகக் கருதி, ருத்ர சிவனுடன் இணைத்துக் கொண்டதினால் சிவன் பார்வதிக் கதையுடனும் ஸ்கந்தனை இணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் ஸ்கந்தனுடன் அக்னிக்கான தொடர்ப்பு மறுக்கப்படவில்லை. (Rana S.S.) 19 ஆகவே மகன்- சூரியன் மற்றும் மாவீரன் என்றக் கதையை இது ஒத்து உள்ளது.

காளிதாசரின் பார்வையில் ஸ்கந்தன்

புராண காலத்தில் இருந்து குமாரசம்பவம் என்ற காவியம் இயற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை அந்த காவியம் கட்டுகிறது. 9 முதல் 11 ஆம் காண்டத்தில் சிவனில் இருந்து வெளி வந்ததை சுமந்து கருவுற்று இருந்த காலத்தை மூன்று காலமாக பிரித்து அவற்றை விவரித்து உள்ளது. முதலாவது அக்னிக்குள் இருந்த குமாரார். இரண்டாவது கங்கையில் இருந்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். கங்கையும் ஹிமாயவனின் மகள்தான். அவளும் சிவனின் மனைவியாகவே இருந்தவள். ஆனால் அவள் கௌரியால் அதிகமாக வெறுக்கப்பட்டவள். அந்த கங்கைக்குப் பின் ஏழு விண்மீன்களாக இருந்த கிருத்திகைகளினால் அவர்களது கர்பப்பையில் சுமக்கப்பட்டவர். ஆனால் அதன் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டவர்கள் மீண்டும் அதை கங்கையில் போட்டு விட, மீண்டும் கங்கையும் அதை நாணல் புதரில் கொண்டு போய் தள்ளியது. ஆகா இப்படியாக சிவனின் விந்து குமாரனாக பிறந்தது. எதேர்ச்சையாக மின்னிக்க்கொண்டு இருந்த அந்தக் குழந்தையைப் பார்த்த பார்வதி அதை தனது மகனாகவே ஏற்றுக் கொண்டாள்...சந்திர ராஜன் கூறுகிறார் 'சிவபெருமான் தானாக படைத்தவரே குமாரா என்பவர்'. தத்துவார்த்தமாகக் கூறினால் சிவனில் இருந்து வெளிப்பட்டவர் குமரர். மேகதூததில் அதைப் பற்றி இப்படியாக கூறப்பட்டு உள்ளது.

ஸ்கந்தன் தேவகிரி மலையை தனதாக்கிக் கொண்டார் சூரியானை விட அதிக ஒளியானவர் அவர் சந்திரனை சூட்டிக் கொண்டு உள்ளவர் அக்னியின் வாயில் கொடுத்தது இந்திரனின் பூத கணங்களைக் காத்திட.

அதற்கு அடுத்த பத்தியில் மேகதூதம் தொடர்ந்தது, ' எஃகு முள்ளைப் போன்ற கால் செருகுகை கொண்ட போர் சேவல் மீது அமர்ந்ந்து கொண்டு உள்ள, அக்னி மூலம் பிறந்த கடவுள் நடனம் ஆடினார்' 20 . குமார சம்பவத்தில் குமாரர் தேவர்களின் படைகளின் படைத் தலைவராகி அதன் பின் நிகழ்ந்த தாரகா வாதத்தையும் பற்றிக் கூறி உள்ளது:

சிவனின் மகனும் தாமரை மலர் போன்ற முகத்தைக் கொண்டவருமானவர் விட்ட அஸ்திரம் ஒரு ஒளி வெள்ளம் போலப் பறந்து சென்றது. இந்த உலகையே தன்னுள் இழுத்துக் கொண்டது போல அது இருந்தது. அது அசுரர்களின் தலைவனை ஒரு பெரிய மலைப் போல கீழே தள்ளி அழிக்க அனைத்து தேவர்களும் மகிழ்சியால் ஆரவாரம் செய்தார்கள்.

ஸ்கந்தனைக் குறித்து காளிதாசர் குறிப்பிட்ட பெயர்கள் குமாரா, சதானணா, ஷண்முகா, ஷன்மதுரா, குஹா, சரவணபவா, கார்த்திகேயா மற்றும் பாவாக்கி போன்றவை. ஏற்கனவே இருந்த ஸ்கந்தப் புராணக் கதைகளுக்கு காளிதாசர் மேலும் புதிய பரிமாணத்தை தந்தார். அவர் மகாபாரதம், ராமாயணம் மற்றும் சிவ புராணங்களில் இருந்த ஸ்கந்தனின் கதையை ஏற்கனவே அறிந்து இருந்தார்.

ஹர்ஷவர்த்தனின் சம காலத்தை சேர்ந்த பாணபட்டர் என்பவர் தாரகா மற்றும் குருன்சா வதத்தைப் பற்றி எழுதி உள்ளார். அதில் சக்தி எனும் ஆயுதத்தின் மகிமையைக் குறிப்பிட்டு உள்ளது மட்டும் அல்லாமல் ஸ்கந்தன் தனது கையில் சிவந்தக் கொடியை ஏந்திக் கொண்டு மயில் மீது ஏறி அமர்ந்து வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

சிவ பார்வதியுடன் ஸ்கந்தனை இணைத்து பேசப்பட்ட கருத்தை தொடர்ந்து இன்னமும் பல விளக்கங்கள் வெளியாயின. சிவன் என்பது சத் எனப்படும் உலக வாழ்வு, சிட் எனப்படும் உமா எனப்படுபவள் ஞானம் மற்றும் ஸ்கந்தன் என்பவர் ஆனாந்தா எனப்படும் பேரின்பம். இவை மூன்றும் சேர்ந்தே முழுமையான பிரும்மனாக உள்ளது. ஆகவே ஸ்கந்தா எனும் பேரானந்தம் அந்த உச்ச நிலையின் ஒரு அம்சமே. 'ஆனதோ பிருமேதி வ்யாஜநாத்' (Taittirēya Upanisad III, 6) 21. அவருடைய வாகனமான மயில் வேதங்களைக் குறிக்க, அவருடைய ஆயுதமான சக்தி வேல் ஞான சக்தி எனும் பிரும்ம வித்யாவைக் குறிக்கும். வேதங்கள் ஒலியை மூலமாகக் கொண்டு ஓதப்படுவதினால் மாயாவை போன்ற படிப்படியாக மாற்றம் அடையும் உலகை மயில் குறிக்கின்றது. அவருடையக் கொடியில் உள்ள சேவல் நிவ்ருத்தி அல்லது ஆத்ம ஞானம் எனும் ஞானப் பாதையைக் குறிக்கும். 22

ஸ்வாமி ஹர்ஷானந்தா 23 என்பவர் ஸ்கந்தனை ஆன்மீகத்தின் பூரணத்துவம் என்கிறார். அவருடைய ஆறு தலைகளில் ஐந்து புலனுணர்வாற்றலையும், ஆறாவது அவற்றை ஒன்றிணைத்து செயல்படும் மனதையும் குறிப்பிடுகிறது. மனத்தைக் கட்டுப்படுத்தி, உருப்படுத்தி அதை பக்குவமாக்கும் பாதையில் சென்றே அந்த மேன்மை நிலையை அடைய முடியும். அந்த உருவகம் அதாவது ஆறு முகங்கள், விழிப்புணர்வு நிலைக்கு (ஞானம்) கொண்டு செல்லும் உடலில் இயல் இயக்கத்தை மீறிய ஆற்றல் உள்ள ஆறு பகுதிகளை இயக்கும் யோகாவுடன் இணைத்துக் கூறப்படுகிறது. ஒரு யோகி எனப்படுபவர் தனது உடல் இயக்க ஆக்க சக்தியை கட்டுப்படுத்தி அதை ஷஸ்ரார சக்கர நிலைக்கு கொண்டு சென்றதும் அவருக்கு சிவ சக்தி எனும் மிக உயர்ந்த நிலை ஞானம் கிடைக்கின்றது. அந்த பக்குவப்பட்ட துரியட்டிடா எனப்படும் ஆன்மீக விழிப்புணர்வு நிலையை எடுத்துக் காட்டுபவரே ஸ்கந்த கார்த்திகேயா என்பவர்.

மயில் மீது அமர்ந்து செல்பவரின் மயில் பாம்பைக் கொள்வதைக் காட்டும் உருவம் காலத்தைக் குறிக்கின்றது . அதன் மூலம் அவர் தன்னைக் காலத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதைக் காட்டுகிறார். பாம்பு என்பது ஆசையைக் காட்டுகிறது. வட நாட்டில் ஸ்கந்தனை பிரும்மச்சாரியாகவே காட்டுகிறார்கள். அனைத்துப் படைப்புக்களின் தன்மைகளை வெளிப்படுத்துவதினால் அதன் மீது அமர்ந்து கொண்டுள்ள ஸ்கந்தன் படைப்புக்களை கட்டுப்படுத்துபவராக காணப்படுகிறார். இவை அனைத்தும் ஸ்கந்தன் மீதான பக்தியினால் வெளிப்படுத்தப்படும் தத்துவார்த்தமான வாதங்களாக தோன்றினாலும், ஆரம்பம் முதலிலேயே இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான பிரிதிபலிப்புக்கள் இருந்தே வந்துள்ளன.

ஸ்கந்த வழிபாடும், சிலை வடிவமைப்புகளும்

வட நாட்டில் ஸ்கந்த வழிபாடு முன்னரே இருந்துள்ளது. குமார குப்தாவின் காலத்தை (415-16 AD) சேர்ந்த கல்வெட்டு மற்றும் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள வெண்கல சிற்ப வேலைப்பாடுடைய பொருள் மற்றும் கல்வெட்டுக்கள் மூலம் அப்போதிருந்த ஸ்கந்தனின் புகழை அறிய முடிகின்றது.

நியூ டெல்லி நேஷனல் மியூசியத்தில் உள்ள இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிவப்பு கல்லிலான ஸ்கந்தனின் சிலை, குவாலியர் மியூசியத்தில் காணப்படும் போதனையாள ஸ்கந்தக் கடவுள் சிலை, உத்தர் பிரதேச அல்மோடாவில் உள்ள பைஜ்யனாத்தில் உள்ள பார்வதி ஆலயத்தில் காணப்படும் குமார கார்திகேயரின் உருவம், நியூ டெல்லி நேஷனல் மியூசியத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச உருவச் சிலை போன்றவை ஸ்கந்தனின் புகழை எடுத்துக் காட்டி அவர் எத்தனை முக்கியமானவராக இருந்துள்ளார் என்பதையும் காட்டுகின்றது. கிழக்கு இந்தியப் பகுதிகள், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சம்பா மலைப் பகுதி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் மண்டி எனும் இடம், போன்றவற்றில் கிடைத்துள்ள ஸ்கந்தனின் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பக் கலைப் பொருட்கள் ஸ்கந்தனின் தொன்மைக் காலத்தையும், அவர் தேவர்களின் முடிசூடா படைத் தலைவராக இருந்ததையும் எடுத்துக் காட்டுகின்றன. யவ்தியாஸ் எனப்படும் பழங்குடி மக்கள் அவரை தமது ஆன்மீக மற்றும் அரசாண்மைத் தலைவராகவும் கருதி இருந்தார்கள். குப்தர்கள் வம்சத்தை சேர்ந்த குமார குப்தா , அயோத்யாவை சேர்ந்த தேவ மித்ரா (1st Cent. AD) மற்றும் விஜய மித்ரா போன்றவர்கள் ஸ்கந்தனின் பக்தர்களாக இருந்துள்ளனர். அன்று ரோதிகா எனப்பட்ட இன்றைய ஹரியானாவில் உள்ள ரோதக் நகரம் யவ்தியாஸ்களின் நகரமாக இருந்தது. இங்கு கிடைத்துள்ள பல கார்த்திகேய உருவங்களைக் கொண்ட நாணயங்கள் மகாபாரதத்தில் 24 இந்த நகரை கார்திகேயருக்கு பிடித்த இடம் எனக் குறிப்பிட்டு உள்ள உண்மையை உறுதிப்படுத்துகிறது.

Yaudheya coin
பஞ்சாப்பின் யவ்திய காலத்திய நாணயம் (300-340 AD) நின்ற நிலையில் உள்ள கார்திகேயரின் கையில் செங்கோல் இருக்க அவருக்கு வலது பக்கத்தில் மயில் காணப்படுகிறது. இவற்றைத் தவிர பிரம்மிய மொழியில் யவ்திய மக்களுக்கு வெற்றி என்ற வார்த்தை உள்ளது. நாணயத்தின் பின் புறத்தில் ஒரு பெண் கடவுள் மெல்லிய உடை உடுத்தியும் தனது இடுப்பில் கையை வைத்துக் கொண்டும் காட்சி தருகிறாள்.

மகாமாயாபுரி எனும் (4th Cent. AD) வடநாட்டு புத்த நூல் என்பது ரோதிகா 25 நகரில் கார்திகேயர் பிரபலமாக அறியப்பட்ட கடவுள் என்று கூறி உள்ளது. தற்காலத்தில் ஸ்கந்தா இங்கெல்லாம் அதிகம் அறியப்படாமல் இருந்தாலும், அவருடைய வாகனமான மயில் வேறு காரணங்களினால் புனிதமாக கருதப்பட்டு, அதைக் கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த அவந்திபுராவில் கிடைத்த ஆறு கைகளைக் கொண்ட ஸ்கந்தனின் சிலை காஷ்மீரத்திலும் ஸ்கந்தன் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. குமாரலோகா என்பதின் நிலமாத புராணத்தில் காணப்படும் செய்தியின்படி ஸ்கந்தன் ஒரு முக்கியக் கடவுளாக இருந்துள்ளார் என்பது தெரிகின்றது. ராஜதாரன்கினி என்பதில் , (Vol. II, p. 340) ஸ்டீன் என்பவர் கல்ஹாநாவில் ஸ்கந்தபாவன விஹாரா என்பதிலும் அவரைப் பற்றியக் குறிப்பு உள்ளது என்று சுட்டிக் காட்டி உள்ளார். அதை ஸ்தாபித்தவர் ஸ்கந்த குப்தா எனப்பட்டவர்.

முதலாம் நூற்றாண்டை சேர்ந்த அயோத்தியாவின் மன்னனான தேவமித்திரன் காலத்து தாமிர நாணயங்கள் மற்றும் கான்பூரில் உள்ள சிலை வடிவமைப்புக்களைக் கொண்ட தூண்கள் போன்றவற்றின் மூலம் உத்திரப் பிரதேசத்திலும் கார்த்திகேயர் மிகவும் புகழ் பெற்று இருந்துள்ளார் என்பது தெரிகின்றது.

கனிஷ்காவின் காலத்தை சேர்ந்த சிற்ப வடிவமைப்புக்கள் மதுராவில் கிடைத்துள்ளன . அவற்றின் மூலம் அப்போது ஸ்கந்த வழிபாடு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. குப்தர்கள் ஆட்சிய பிற்காலத்தில் ஜான்சி பகுதியில் உள்ள தேவகர்ஹில் உள்ள தசாவதார ஆலயத்தில் கிடைத்த சிற்பங்கள் போன்றவை ஸ்கந்த வழிபாடு ஆலயங்களிலும் பரவலாக இருந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது. முந்தைய பெங்கால், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் ஸ்கந்த வழிபாடு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தாம் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளின் ஆதாரங்களை கொண்டும் , இந்திய தேசிய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் கிடைத்துள்ள குறிப்புகளைக் கொண்டும் எஸ். எஸ். ராணா என்பவர் (pp. 96-106) இவற்றை விவரித்து உள்ளார்.

கார்த்திகேயா அல்லது குமரா என்பது இளமை மற்றும் அதன் தன்மையைக் காட்டுகின்றது. குமாரா என்றால் சக்தி என்று பொருள். அவருடைய வாகனமான மயில் மற்றும் அவருக்கு துணையாக உள்ள மற்றவர்கள் சக்தி மற்றும் ஆற்றலைக் காட்டுகிறார்கள். டி .டி. சுக்லா 26 மற்றும் ஜே. என். பானர்ஜி 27 போன்றவர்கள் கார்திகேயரின் உருவ அமைப்பைக் குறித்து தந்துள்ள விளக்கங்கள் இவற்றை ஆமோதிக்கும் வகையில் உள்ளன. அவர் சிவப்பு நிற உடலைக் கொண்டவர் சிவப்பு உடை உடுத்திக் கொண்ட காலை வேளை சூரியனைப் போன்று பிரகாசமானவர். அவருடைய இளமையான. எழிலான உருவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் வகையில் இருக்கும். அவர் முகத்தில் எப்போதுமே புன்முறுவல் உள்ளது, அவர் மேன்மையானவர், அற்புதமானவர் மற்றும் தலையில் பல்வகை வேறுபாடுகளையுடைய கிரீடங்களை அணிந்துள்ளவர்.

Bibliography

  1. Banerjee, J.N. The Development of Hindu Iconography, 1956.

  2. Bhattacharyya, Haridas Ed., The Cultural Heritage of India Vol. IV The Ramakrishna Mission Institute of Culture, Calcutta, 1956.

  3. Chatterjee, Asim Kumar. The Cult of Skanda-Karttikeya in Ancient India, Punthi Pustak, Calcutta, 1970.

  4. Clothey, Fred W. The Many Faces of Murukan, Mouton Publishers, New York, 1994.

  5. Harshananda, Swami, Hindu Gods and Goddesses, Śrī Ramakrishna Math, Madras, 1987

  6. Rajan, Chandra. The Complete Works of Kalidasa, Vol. I Sahity Akademi, Delhi, 1997.

  7. Rana, S.S. A study of Skanda cult, Nag Publishers, Delhi, 1995

  8. Shukla, D.N. Hindu Canons of Iconography and Painting, Vastu-Sastra Vol II, Vastu-Vanmaya-Prakasana-Sala, Lucknow, 1958.

  9. Sircar, D.C. Studies in the Religious Life of Ancient and Medieval India, Motilal Banarsidass, Delhi, 1971.

  10. Śivananda, Swami, Lord Shanmukha and His Worship, Divine Life Society, Śivananda Nagar U.P. 1996.

  11. Swami, Prabhupada, Bhagavad-Gīta As It Is, Bhaktivedanta Book Trust, Bombay, 1991.

  12. Wilkins, W.J. Hindu Mythology, Delhi Book Store, first Indian edition 1972.

References

  1. Indian Historical Quarterly, Vol VII (1931), p. 310
  2. A Study of Skanda Cult, p.12
  3. yam vahanti mayūrah: (2.3)
  4. Yam ghantā-patākini (2.5)
  5. Yasca mātrganairhityam sadā parivrte yuvā
  6. ibid 5.1
  7. ... Yo 'si' so si namo'stute (6.4)
  8. Baudhayana Dharmasūtra. Ii 5.7:
  9. Mauryair hiranyārthibhirarcāh prakalptiah
  10. The Cult of Skanda-Kārttikeya in Ancient India, p.30.
  11. BrahmĀindra Yama Senāpatyānidvārāni (Kautilya, 2.4.19).
  12. Smrtirdhrtisca dharmasca pātu tvām sarvatah. Skandasca bhagavān devah Somasca sabrhaspatih.
  13. Kartttikeyasya ca sthānam dharmasthanam ca pasyati
  14. utpattistasya rajendra bahurupa vyavastita!
  15. Caturbhujo hi bhagavān Vasudevah sanātanah. Prādurbhutah kumārastu devasenāninisayā.
  16. Mattopi jñānayogena skandophyādhikabhāvabhūtā. Evam Jñātvā mahesopi yato jñānamahodayam.
  17. Agarwala, V.S. Vāmana Purāna - A study pp.109-110
  18. A.K. Chatterjee, The Cult of Skanda-Kārttikeya in Ancient India. p. 22.
  19. tr. Chandra Rajan: The Complete works of Kalidasa, Sahitya Akademi, 1997.
  20. The Cultural Heritage of India, Vol IV.
  21. ibid.
  22. Hindu Gods and Goddesses, pp.138-143.
  23. Mbh. 32.4
  24. Purānic and Tantrik Religion, p.149
  25. Hindu Canons of Iconography and Painting, Vastu Śāstra, Vol II.
  26. The Development of Hindu Iconography, Calcutta, 1956.
  27. D.N. Sukla, pp.293-298.

Dr. R.K. Seth, Reader in Hindi at the University of Delhi, writes in Hindi on Tamil cultural themes as well as translations from Tamil to Hindi. His books include a complete Hindi translation of Tirukkural.

Prof. R.K. Seth
Satya Śodh Sansthan
8-A/141, W.E.A. Karol Bagh
New Delhi - 110 005

See also these related research articles about the cult of Skanda-Kumara in Sanskrit sources:

Index of research articles on Skanda-Murukan