Lord Skanda-Murugan
 

சோமாஸ்கந்த மூர்த்தி சிலையின் வடிவமைப்பு

by A. Vēlusamy Suthanthiran

சோமாஸ்கந்த மூர்த்தி
சோமாஸ்கந்த மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தியின் வடிவமைப்பைக் குறித்து பல வர்ணனைகள் உள்ளன. சிவன் பார்வதியின் மைந்தனான முருகன் ஒரு குழந்தை வடிவில் அவர்களுக்கு நடுவில் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலை அமைப்பு ஒரு குடும்பத்திற்கு குழந்தை அவசியம் என்பதை விளக்கும் தத்துவத்தில் அமைந்து உள்ளது. மகிழ்ச்சிகரமான குடும்பத்திற்கு குழந்தை ஒன்று தேவை என்று புறநானூறு மற்றும் திருக்குறள் போன்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளன. சம்ஸ்கிருத நூலான 'அவந்தி சுந்தரி கதாசாரா' என்பதிலும் அந்தக் கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. பல்லவ மன்னன் ராஜசிம்மனின் மனைவியானவள் ஒருமுறை சோமஸ்கந்தனின் சித்திரத்தைக் கண்டபோது கந்தனைப் போலவே ஒரு அழகான குழந்தை தனக்குப் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாளாம்.

இன்னொரு கருத்தின்படி அந்த வடிவமைப்பு 'சத்', 'சித்' மற்றும் 'ஆனந்தம்' என்ற மூன்று நிலைகளைக் குறிப்பதாகவும் சிவன், பார்வதி மற்றும் முருகன் என்ற மூவரும் 'இச்சா சக்தி', 'கிரியா சக்தி' மற்றும் 'ஞான சக்தி'களை வெளிப்படுத்தும் தோற்றங்களைத் தருவதாகவும் கூறுகின்றது (வைத்தியலிங்கம் 1980 -1990).குழந்தை முருகனை மடியில் வைத்துக் கொண்டபடி தோற்றம் தரும் சிவன், பார்வதி என்பவர்கள் இந்த உலகின் பெற்றோர்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளனர். குமார சம்பவம் என்ற அற்புதமான காவியத்தை இயற்றிய காளிதாசன், உலகத்துக்கே பெற்றோர்களைப் போல (ஜகத்குரு) இருக்கும் வகையில் அந்த தோற்றத்தைத் தருகிறார்கள் என எழுதி உள்ளார். குமரகுருபரர் தன்னுடைய நூலான 'பிறப்பான் திரட்டு' என்பதில் அந்த மூன்று உருவங்கள் சத்வ, தமஸ், மற்றும் ராஜாஸ் என்ற மூன்று குணங்களையும் குறிப்பிடுவதாக எழுதி உள்ளார். ஆகவே சோமாஸ்கந்தனின் சிலை அமைப்பு சிவன்-பார்வதியின் அம்சமாக உள்ள முருகனின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது.

சோமாஸ்கந்த சிலை வடிவமைப்பின் தத்துவங்கள்

இதுவரை கிடைத்துள்ள அனைத்து கற்சிற்பங்களும் சோமாஸ்கந்தன் தன் கையில் மலர் கொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் வகையிலான ஒரே ஒரு தோற்றத்தில்தான் உள்ளன. ராஜ சிம்மன் காலத்தைய சிற்பங்களில் முருகனின் தலையில் முண்டாசு கட்டி உள்ளது போலவும் அதன் மீது எதோ ஒரு கிரீடம் வைக்கப்பட்டு உள்ளது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் 'கரா' மற்றும் 'மகர' குண்டலங்களை காதில் போட்டுக் கொண்டு உள்ளதும் தெரிகின்றது.

மாமல்லக் கோவில் சிற்பங்களில் அவர் அமர்ந்து கொண்டு இருக்கும் நிலையிலான வடிவங்களே செதுக்கப்பட்டு உள்ளன. அவருடைய உடல் அமைப்பும் முகமும் தெளிவாக உள்ள குழந்தையின் வடிவமைப்பையேக் காட்டுகின்றது. நெற்றியில் உள்ள அணிகலன்கள் பளீர் எனத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 'கரண்ட மகுடம்' எனும் தலைமுடி நன்கு பின்னப்பட்டு உள்ளது. சலுவான் குப்பம் குகைக் கோவிலில் உள்ள ஷண்முகரின் இரண்டு கைகளும் தோள்பட்டை வரை உயர்ந்து உள்ளது. ஆனால் அவருடையக் கைகளில் என்ன வைத்துக் கொண்டு உள்ளார் என்பது தெரியவில்லை.

காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஆலயத்தில் சோமாஸ்கந்தனைப் போன்ற வடிவமைப்பின் சிலப் பகுதிகள் காணப்படுகின்றன. (லாக்வூத், சிரோன்மணி, தயானந்தன் 1974 -29 ). அறை எண் 41ல் உள்ள வரைபடம் அற்புதமாக உள்ளது. (சிவராமமூர்த்தி 1965 -68 ). அங்குள்ள குழந்தை வடிவிலான குமரனின் வடிவம் களங்கம் இல்லாத முகத்தைக் காட்டுகின்றது. சின்ன சின்ன தலை முடிகள் அவர் தலையில் காணப்படுகின்றன. தாயின் மடியில் அமர்ந்தபடி ஆனந்தமாக அவர் தன்னுடைய தந்தையை பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருக்கின்றார்.

சோழர்கள் காலம்

சோழர்கள் காலத்தை சேர்ந்த பித்தளை உலோகங்களில் செதுக்கப்பட்டு உள்ள சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள் அவை எந்த அளவு கலை நுணுக்கமாக செய்யப்பட்டு உள்ளன என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன. அவற்றில் உள்ள வடிவமைப்புக்கள் ஸ்கந்தனை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் மற்றும் நடனமாடும் நிலையிலும் காட்டுகின்றன.

சோழர்கள் காலத்து ஆலயங்களில் மிகச் சிறப்பானது பல்லவநீஸ்வரத்தில் உள்ள பல்லவநீஸ்வர ஸ்வாமி ஆகும். அந்தப் பெயரே அது பல்லவ மன்னர்களின் காலத்து சிலை என்பதைக் காட்டுகின்றது. பல்லவன் காலம் முதல் சோழர்கள் காலம் வரை பித்தளை உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ள வடிவமைப்புக்கள் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்களின் கலை வண்ணத்தில் உள்ளது. அவைகளில் சிவன் மற்றும் பார்வதிக்கு இடையே அமர்ந்து உள்ள முருகன் எதோ யோசனையில் ஆழ்ந்தபடி தன்னை மறந்த நிலையில் காணப்படுகிறார். அது பல்லவ காலத்திய சிலை வடிவமைப்புடன் ஒத்து உள்ளது. (சிவராமமூர்த்தி 1963 -58). ஸ்கந்தனின் காதுகளை 'பத்திரக் குண்டலங்கள்' அலங்கரிக்கின்றன. நெற்றியில் உள்ள அணிகலன்கள் ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுக்கும் வகையில் அமைந்து உள்ளன. வலது கையில் தாமரைப் பூவை வைத்து இருக்க இடது கை வரத முத்திரை தோற்றத்தை தந்தபடி உள்ளது.கழுத்தில் காணப்படும் அணிகலன்கள் அற்புதமான வடிவமைப்புடன் துல்லியமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. கண்கள் மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் இருக்க கொயுரைகள், தண்டைகள் (கொலுசு), மற்றும் கணுக்காலில் உள்ள அணிகலன்களும் கலை நயம் மிகுந்து கம்பீரமாக காட்சி தரும் வகையில் வடிவமைகபட்டு உள்ளன.

950 ஆம் நூற்றாண்டை சார்ந்த திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தன் தனது வலது காலை மடக்கி வைத்துக் கொண்டபடி காட்சி தருகிறார். சன்னவீராவையும் (ஒருவித அணிகலன்), பூமாலையையும் கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு கையால் கடக முத்திரை சின்னத்தையும், மறு கையால் வரத முத்திரை சின்னத்தையும் காட்டியவாறு உள்ளார்.

சிவபுராணத்தில் காணப்படும் சோமாஸ்கந்தன் பத்தாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியை சேர்ந்தவர். அதில் உள்ள ஸ்கந்தன் உண்மையிலேயேயே வைரம் போன்று ஜொலித்தவாறு அற்புதமாக காட்சி தருகிறார். அதில் உள்ள வடிவமைப்பு மிகவும் நுண்ணியமாக செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அங்கத்திலும் நேர்த்தியான கலை நயம் வெளிப்படுகின்றது. மொத்தத்தில் நடனமாடும் வடிவில் அமைந்து உள்ள மூர்த்தியின் வடிவம் சொல்ல முடியாத அளவு அழகு சொட்டும் அதி அற்புதமான வடிவமைப்பில் செய்யப்பட்டு உள்ளது. திருவேங்காட்டில் உள்ள ஸ்வேதனாரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தனின் வடிவம் மிகவும் வசீகரமாக உள்ளது. நின்ற நிலையில் படைக்கப்பட்டுள்ள அதன் தலையில் காணப்ப்படும் கரண்ட மகுடமும், கிண்கிணிகள் அடங்கிய ஒட்டியாணமும் நவநாகரீகமான தோற்றத்தில் மனதை அல்லும் விதத்தில் செய்யப்பட்டு உள்ளன.

தஞ்சாவூர் நீடூரில் உள்ள சோமாஸ்கந்த சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. குழந்தை முருகனின் அழகு அதில் விவரிக்கவே முடியாத அளவு கலை நயத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டு இருக்க கரண்ட மகுடம், காதணிகள், நெக்லேஸ், சன்னவீரா, ஒட்டியாணத்தில் இருந்து இருபுறமும் தொங்கும் குஞ்சலங்கள், பாதசரச்ஸ் ஒபோன்ற அணிகலன்கள் அதன் அழகிற்கு இன்னுமா அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளன.

12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டிகுவாரன் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தன் தனது வலது காலை தூக்கி வைத்தபடியும், இடது கையை நீட்டி வைத்துக் கொண்டு நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். வலது கையில் மலர் இருக்க கேச மகுட அமைப்பில் தலை தலைமுடி காணப்படுகிறது.

12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் வெல்லூர் எய்ருவரை ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் ஸ்கந்தனின் வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் நீண்டு இருக்க இடது கை வரத கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. விக்டோரியா அருங்காட்சியகத்தில் உள்ள 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமஸ்கந்தனின் ஸ்கந்த வடிவம் சமபங்க கோலத்தில் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் காட்சி தரும் அமைப்பில் உள்ளது. அந்தக் கலைவண்ணம் சிறந்து விளங்கும் வகையில் அமைந்து உள்ளது.

அதே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குன்னான்டார் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் அவருடைய கரங்களில் மலர்கள் காணப்படுகின்றன. தலையை சடைமுடி அலங்கரிக்கின்றது.

பங்கால் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் இரண்டு கரங்களும் நீண்டு இருக்க இடது கால் நேராகவும், வலது கால் சற்றே முன் நோக்கி வளைந்து உள்ள நிலையிலும் காணப்படுகின்றது.

தில்லையாடி சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் கைகளில் மலர்கள் உள்ளன. கால்கள் சதுர தோற்றத்தில் காட்சி தருகின்றன.

சோமாஸ்கந்த மூர்த்தி
சோமாஸ்கந்த மூர்த்தி
சோமாஸ்கந்த

ராமனன்தீஸ்வரா ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் வலது கையில் மலர் இருக்க இடது கை கீழ் நோக்கி நீண்டு உள்ளது. திருப்பனையூர் சௌந்தரீஸ்வரர் ஆலயம் மற்றும் கொடவாசல் கோணீஸ்வாரர் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் உள்ள ஸ்கந்தன் பத்மாசனக் காட்சியில் அமர்ந்து கொண்டு கைகளில் மலர்களை ஏந்தியபடி உள்ளார். திருவல்லிமலை ஆலயத்தில் காணப்படும் முருக வித்தியாசமான கோலத்தில் உள்ளார். வலது கை காடாக முத்திரையை காட்டியபடியும் இடது கை மேலே தூக்கியபடியும் உள்ளது. வலது கால் எதோ யுத்தத்திற்கு கிளம்புவர் போல அமைந்து இருக்க காதுகளை பத்திர குண்டலங்கள் அலங்கரிக்கின்றன.

பாண்டியர் காலத்து சிலைகளில் மிக அற்புதமானவை திருப்பரம்குன்றம் மற்றும் திருப்பாக்கலி ஆலயங்களில் உள்ளன (ஏகாம்பரநாதன் 1984 -78).

விஜயநகர காலத்திலும் நிறைய பித்தளை உலோகத்திலான சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. AD 1913 ஆம் ஆண்டு நெல்லூரில் கிடைத்த சிற்பத்தின் கலை நயம் அது விஜயநகர காலத்தை ஒட்டியது என்பதை நினைவுபடுத்தியது. (கங்கோலி 1915 - 125). அதில் ஸ்கந்தன் தன் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

ஹோசூரில் உள்ள சிற்பத்தில் ஸ்கந்தன் மாடு ஒன்றின் மீது சாய்ந்து நின்றபடி கடுரா தோற்றத்தை தந்தபடி இருக்கின்றார். விஜயநகர சிற்பங்களில் உள்ள கரண்ட மகுடம் அதிக நீளமாக உள்ளது. ஆபரணங்களும் அதிகமாகவே உள்ளது. உதயாபாளையம் கொலுமூர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் உள்ள ஸ்கந்தனின் தலை விரிந்த கோலத்தில் உள்ளது. ஆனால் மாலைகளும் காதணிகளும் அற்புதமான தோற்றம் தரும் வகையில் செதுக்கப்பட்டு உள்ளன.

கல்லிடைக் குறிச்சி சோமாந்தர் கோவிலில் உள்ள ஸ்கந்தன் சிலையில் அவர் முன்னால் தெரியும்படி இரண்டு கால்களையும் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு உள்ளார். திருக்குரலத்தில் உள்ள குரலனாதஸ்வாமின் ஆலயத்தில் உள்ள ஸ்கந்தன் இடது காலை மடித்து ஆசனம் போல வைத்து இருந்தும் வலது காலை குட்குடிகாசன கோலத்தில் வைத்தபடி இருக்க தலை அலங்காரம் குரிதமுகுடா தோற்றத்தில் செய்யப்பட்டு உள்ளது.

கல்வெட்டுக்களில் சோமாஸ்கந்தன்

சலுவான்குப்பத்தில் உள்ள அதிரானகண்டா ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் சிவனை பசுபதி என்றும் பார்வதியை மலைமகள் என்றும் ஸ்கந்தனை குஹா என்றும் கூறப்பட்டு உள்ளது. ராரராஜ சோழன் I னின் உமா ஸ்கந்த சாஹித்தியத்திலும் இவ்வாறே கூறப்பட்டு உள்ளது.

ஆகமாக்களில் சோமாஸ்கந்தன்

ஸ்ரீ தத்வநிதி என்ற நூல் சோமஸ்கந்தன் இரண்டு கைகளைக் கொண்ட குழந்தையாகவும், பத்மாக்களை வைத்து உள்ளபடியும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. காஷ்யப சில்ப சாஸ்திரம் உட்கார வேண்டிய முறை, நிற்கும்போது, நாட்டியம் ஆடும்போது போன்ற நேரங்களில் இருக்க வேண்டிய முக பாவங்களைக் காட்டுகின்றது. சிலை நிர்வாண கோலத்தில் உள்ளபோது சன்னவீராவை (ஜட்டி போன்றது) அணிந்து கொண்டு இருக்க வேண்டும். வலது கை சுகி முத்திரையைக் காட்டிக் கொண்டு இருக்க வேண்டும். சில்பரத்தனா என்ற நூலின்படி இரண்டு கைகளில் ஒன்றில் பூவையும், அல்லது வரத முத்திரையை காட்டிக் கொண்டும், வலது கை புத்தகங்களை ஏந்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்கிறது. அதில் அப்படி அமர வேண்டும், நிற்க வேண்டும், நாட்டிய தோற்றம் எது என்பதையும் விவரிக்கப்பட்டு உள்ளது. நாட்டியனம் ஆடுகையில் இடது கையில் பழத்தை வைத்துக் கொண்டும் வலது கை சுகி முத்திரையை தந்தபடியும் இருக்க வேண்டும் என்கிறது. ரௌரவகாமா என்ற நூல் கரண்ட மகுடம் மற்றும் பூக்களைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. அதிலும் எப்படி அமர வேண்டும் நிற்க வேண்டும், நாட்டியத் தோற்றம் எது என்பதை விளக்கி உள்ளது.

இலக்கியங்களில் சோமாஸ்கந்தன்

சிவன்-பார்வதிக்கு இடையே அமர்ந்து உள்ள ஸ்கந்தனை குமாரவேல் என கந்தபுராணத்தில் கூறப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்லாது சிவன்-பார்வதி இருவரின் தோற்றங்களை இரவும் பகலும் என வர்ணிக்கின்றது. ஸ்கந்தனின் நிலை இருக் கால கட்டமும் மாறும் நேரமான மாலையைப் போன்றது என்று கூறுகிறது. குமரகுருபரனின் பிறப்பான் திரட்டில் சோமஸ்கந்தனில் காணப்படும் குமரனை 'நகிலம்குலவி ', அதாவது குழந்தை எனக் கூறி உள்ளது. 'குமார மடமை' என்ற படைப்பில் ஸ்கந்தனை மடலை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அனைத்திலும் இருந்து ஸ்கந்தனின் வடிவமைப்பில் காணப்படும் ஸ்கந்தனுக்கு உள்ள முக்கியத்துவம் புரிகின்றது.


Translated into Tamil by: சாந்திப்பிரியா

This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998

Dr. A. Velusamy Suthanthiran is the author of A Study of Tiruvengadu Temple and several other books in Tamil. He has presented papers on the iconography of Somaskanda at international conferences in Rome and Naples (1992), as well as numerous papers and lectures at conferences and universities throughout India. He may be contacted at:

Department of Sculpture
Tamil University
Tanjavur 613 005 India

Other articles from International Conferences on Skanda-Murukan

Other articles about Kaumara Iconography and Art History:

  • Iconography of Skanda-Murukan
  • 'Iconography of Murugan' by Raju Kalidos
  • "Trimurti in Medieval South India"
  • "Iconography of Somaskanda"
  • "Palani Andavar Idol: A Scientific Study"
  • "Rare Image of Brahmasasta"
  • "Kinetic Iconography of Murukan"
  • The Iconography of Goddess Kaumārī
  • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
  • "Significance of Kaumara Icons"
  • "Mailam Murukan temple"
  • "7th cent. Murukan image discovered"
  • "Vallakkottai Murukan Temple"
  • "Karttikeya Images of Ancient Java"
  • "Skanda Images in Ancient Cambodia"
  • "17 Iconographical Aspects of Subrahmanya"
  • 19th Century Bengali Watercolor of Karttikeya
  • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
  • Galleries of Kaumara Iconography

  • Gallery One: Tiruvavaduthurai Adheenam
  • Gallery Two: 1920's - 40's collection
  • Gallery Three: early to late 20th century
  • Gallery Four: 1930-50 lithographs
  • Aru Padai Veedu paintings
  • Paintings of famous temple moolavars