Lord Skanda-Murugan
 

வள்ளி எனும் பொங்கி அம்மன் இல்லம்

Home of Pongi (a.k.a. Valli) Amman

www.Pongi.org official website of Valli Malai

வள்ளி எனும் பொங்கி அம்மன்
வள்ளி எனும் பொங்கி அம்மன்
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்

தமிழில் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

திருச்செந்துhரில் கந்தர் சஷ்டியை முடித்துக் கொண்ட பின் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தை சென்று அடைந்தால் வள்ளி மலையை அடையலாம். அங்குதான் வள்ளி அவதரித்தாள். இருபதாம் நூற்றாண்டின் முதல் காலத்தில் தென் இந்தியா முழுவதும் வள்ளி மலை மகாத்மியம் பற்றியும் துறவி அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழையும் பரப்பி வந்த வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் 22.11.1950 ல் சமாதி அடைந்தார். ஆனால் முருக பக்தர்களுக்கு இந்த சக்தி பீடத்தின் சக்தி புரியும், தெரியும். வள்ளிக்கு வள்ளி மலையே விளையாட்டு மைதானமாக இருந்து உள்ளது. அங்குதான் அவள் முருகனுடன் ஆடிப்பாடி, கண்ணாமூச்சி ஆட்டமாடி விளையாடினாள்.

அந்த மலையை சுற்றி உள்ள இயற்கைக் காட்சிகள், குகைகள், பசுமை நிலங்கள், நீரூற்றுக்கள் எனப் பலவும் அந்த வள்ளி மலைக்கு அழகு சேர்த்து கடவுள் அங்கு இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடும் குளிரில் வசிக்கும் சிவபெருமானின் இருப்பிடமான இமயமலை சரிவுகளுடன் வள்ளி மலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.

வள்ளி மலை முழுவதுமே வள்ளி அம்மா அல்லது பொங்கி (பொங்கி எழும் சந்தோஷம்) என்றக் கடவுள் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்க ஏற்படுத்திய இடம் போல உள்ளது. என்றும் குமாரனாக உள்ள முருகனைப் போலவே உள்ள பொன்னிக்கும் என்றும் பன்னிரண்டு வயதே. வள்ளி மலையில்தான் முருகனின் மனம் கவர்ந்த மங்கையான வள்ளி பிறந்தாள் என்பதால் அவளுடைய ஆத்மா அங்கு மட்டும் அல்ல அங்கு
Pongi on Surasamharam Day
Sūrasamhāram: Pongi Amma after the battle
Ascent to Tiruppukazh Asramam
Ascent to Pongi's Vallimalai Asramam
Balananda Sadhu offers milk abhisekam to Pongi
Pongi's servant Balananda Sadhu (below) bathes Pongi with milk abhisekam (above)
Valli Malai Balananda Sadhu
Guru Puja 1999
Guru Puja 1999 in Pongi's cave

வரும் பக்தர்களின் உள்ளத்திலும் நிறைந்தே உள்ளது. ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளிடம் இருந்து பொறுப்பை ஏற்றுள்ள வள்ளிமலை பாலானந்த ஸ்வாமிகள், பொங்கியின் நெருங்கிய நண்பர் எனவும் அவர் தரும் திருப்புகழ் விளக்க உரைகள் உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்களிடம் பெறும் வரவேற்பைப் பெறுகின்றது. மிகவும் நலிவுற்று இருந்த வள்ளிமலை சச்சினாநந்த திருப்புகழ் ஆசிரமத்தை தன் சொந்த முயற்சிகளினால் புதுப்பித்தார். அதை ஒரு உதாரணமாகக் கூறும் வகையில் சிறப்பு மிக்க ஆஸ்ரமமாக மாற்றி தினமும் அன்னதானம் செய்யும் அளவுக்கும், விழாக் காலங்களில் அங்கு வரும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யும் அளவுக்கும் முன்னேற்றம் அடையச் செய்து உள்ளார்.

என்றும் பிரும்மசாரியாகவே இருந்து வரும் பாலானாந்தா சாது தான் இயங்கி சக்தி ஊட்டும் அலுவலகத்தில் தொழில் நுட்பனராக இருந்தார். அவர் பொங்கி அம்மனின் சமையல்காரர், வாகனம் ஓட்டுபவர், பூசாரி, கணக்காளர், உதவியாளர், நிர்வாகி, மேற்பார்வையாளர் என அனைத்தையும் உள்ளடக்கி வேலை செய்பவர். முதலில் குவைத், அடுத்து 2000 ஆம் ஆண்டு மே - ஜூன் மாதத்தில் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் (பிப்ரவரி, 2000) அவர் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகளின் குரு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். இப்போது எல்லாம் வள்ளி மலைக்கு செல்பவர்கள் அதை சக்தி பீடம் எனக் கருதாமல் சுற்றுலா செல்லத் தகுந்த இடமாகவே நினைக்கத் தொடங்கி உள்ளார்கள்.

அதனால் அங்கு இருந்த தெய்வீக சூழ்நிலை மாறிவிட்டது. அதைக் கண்ட பாலனந்தா ஸ்வாமிகள் அந்த நிலையை மாற்றி அமைக்கவும் வள்ளி மலை, பொங்கி அம்மா மற்றும் அதன் பண்பாட்டை நிலை நிறுத்தும் முறையில் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு வருகைத் தரும் அனைத்து பிரிவினருக்கும் போதனை செய்தவண்ணம் உள்ளார். வள்ளி மலைக்கு வருபவர்களுக்கு அதிக வசதிகள் இல்லை என்பதினால் அங்கு செல்பவர்கள் பாலனந்தாவைப் போல வெற்றுத் தரையில் படுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

வள்ளி மலை

வள்ளி மலை என்பது வட ஆற்காட்டு மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ளது. அங்கு உள்ள முருகன் ஆலயத்தில் அவர் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்துள்ளார். அந்த ஆலயத்தின் பின்புறம் உள்ளது சரவணப் பொய்கை என்ற குளம். அந்த மலையின் உச்சியில் இன்னம் ஓரு முருகன் ஆலயம் உள்ளது. ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும்.

அந்தப் படிக்கட்டுக்களின் சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் இடம் உள்ளது. அவற்றைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் ஒருமுறை கிருபானந்தவாரியார், அருணாசலம், மற்றும் அப்பாதுரை போன்றவர்கள் அங்கு இருந்த ஒரு பாறையைத் தூக்கிய பொழுது உள்ளே இருந்து புகை மண்டலம் வெளி வந்தது. உள்ளே பார்த்தால் பல ரிஷிகளும், முனிவர்களும் யோக நிலையில் அமர்ந்து இருந்தனர். அதைக் கண்ட அவர்கள் பயந்து போய் மயக்கம் அடைந்து விட்டனர். அதன் பின் அந்தப் பாறையை மட்டும் புதுப்பிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அதைக் குறித்து மேலும் பல கதைகள் உலவுகின்றன.

வள்ளி மலை சக்தி பீடம்

இந்த மலையில் பல சித்தர்கள் தவம் இருந்து இருக்கின்றனர். இதை சக்தி பீடம் என்று கூடக் கூறலாம். அந்த மலை உச்சியில் வள்ளியின் பக்கத்தில் முருகன் தன்னை மரமாக மாற்றி காட்டிக் கொண்ட இடமும் உள்ளது. பட்டுப் போய்விட்ட அதை வள்ளி மலை ஸ்வாமிகள் எடுத்து விட்டு அங்கு தண்ணீர் குளத்தைக் கட்டினார்.

பொங்கி என்ற வள்ளி

ஒருநாள் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் மலை மீது நடந்து கொண்டு இருந்தபோது அவர் வள்ளியை ஒரு சிறு பெண் உருவில் காண நேர்ந்தது. அவள் விரகர நோக்கியம் (Virakara Nokkiyam) அவளைப் பார்த்து 'நீ யார்?' என்று கேட்க 'நான் யார் என்று தெரிவது முக்கியம் அல்ல. ஆனால் என் பாடலைக் கேட்டால் உன் மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லையா?' என்றாள். அது முதல் வள்ளி மலை ஸ்வாமிகள் ராக தாளங்களுடன் பாடத் துவங்கினார். அங்கேயே ஒரு பாறையில் அவளை ஸ்தாபனம் செய்தார்.

கணேஷ் கிரி

கணேஷ் கிரி Ganesh Puja, கணேஷ் கிரி
கணேஷ் கிரி
Ganesa Puja
Vallimalai Asramam view from peak
Vallimalai Asramam view from peak

வள்ளித் திருமணத்திற்கு உதவிய யானை மற்றும் பிள்ளையார் உருவச் சிலைப் பதித்த பாறை ஒன்று அங்கு உள்ளது. இயற்கையிலேயே பிள்ளையார் போல் அமைந்து உள்ள அந்தப் கணேஷ் கிரிப் பாறை பக்தர்களை பாதுகாக்கின்றது.

Tirumal Gireeswara
Vallimalai hill peak: Tirumal Girīswara
Panoramic view of Vallimalai Ashram
Panoramic view of Vallimalai Swami's
Tiruppukazh Asramam as seen
from Tirumal Girīswara
Vallimalai Chariot festival
Valli Malai Subrahmanya Swami's ther (chariot) takes four days to drag around Valli Malai during the annual festival in February.

திருப்புகழ் ஆஸ்ரமம்

வள்ளிமலை பாறைக்குப் பக்கத்தில்தான் இந்த ஆஸ்ரமம் அமைந்து உள்ளது. ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் திருப்புகழை வேத மந்திரம் என ஏற்றுக் கொண்டு அதை இசையுடன் கூடிய பாடலாக அமைத்து பாடச் சொல்லித் தந்தார். 1950 ஆம் ஆண்டில் அவர் சமாதி எய்தினார். அந்த சமாதி ஒரே பாறையில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது அந்த ஆஸ்ரமம் ஸ்ரீ பாலநந்தா ஸ்வாமிகளினால் நிர்வாகிக்கப்படுகின்றது.

சிவா விஷ்ணு
திருமால் கிரீஷ்வரா என்ற சிவலிங்கம் அந்த மலை மீது உள்ளது. பூஜைகள் முடிந்த பின் அங்கு உள்ள பூசாரி பக்தர்களை சடரி என்பதால் ஆசிர்வதிக்கிறார். அதனால் இது ஒரு வைஷ்ணவத் தலம் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

குமரி தீர்த்தம்
ஆஸ்ரமத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது சூரியன் காண சுனை (Suriyan kaanak cunnal) என்ற நீர் ஊற்று. அதாவது சூரிய ஒளிகளே தன் மீது படாமல் உள்ள ஊற்று அது. புராணக் கதையின்படி அங்கு முருகன் வந்து வள்ளியிடம் தனக்கு தினையும் , தேனும் தருமாறுக் கேட்டாராம். அதைத் சாப்பிட்டதும் விக்கல் எடுக்க தனக்கு சூரிய ஓளியே படாத நீர் ஊற்றில் இருந்துத் தண்ணீர் கொண்டு வந்துத் தருமாறு அவர் கேட்டார். அந்தக் குளம் கங்கையைப் போல வற்றாத குளம். இளம் பெண்கள் அங்கு வந்து தங்களுடைய தலை மீது அந்த குளத்து நீரைத் தெளித்துக் கொண்டு தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என வள்ளியிடம் வேண்டிக் கொள்வது உண்டு என்று பனை ஓலைகளில் எழுதப்பட்டு உள்ள செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.

வள்ளி மற்றும் தேவசேனா ஆலய வரலாறு

வள்ளியும் தேவானையும் மகாவிஷ்ணுவின் மகள் ஆவர். அவர்கள் தங்களுக்கு கோபமே இல்லாத கணவன் வேண்டும் என எண்ணினர். அவர்கள் அதற்காக தபம் இருக்க அவர்கள் முன் வந்த முருகக் கடவுள் வள்ளியை வேத்தாஸின் மகளாகவும் தெய்வானையை இந்திரனுக்கும் மகள்களாகப் பிறந்த பின் அவர்களை தான் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

சூரபத்மனை அழித்து இந்திர லோகத்தை இந்திரனிடம் கொடுத்ததின் காரணமாக மகிழ்சியுற்ற இந்திரன் தன் பெண் தெய்வானையை அவருக்கு மண முடித்தார். வள்ளியும் வேத்தாக்களின் மன்னன் நம்பி ராஜுக்கு மகளாகப் பிறந்தாள்.

பன்னிரண்டு வருடம் வள்ளியும் முருகனும் லீலைகள் பல புரிந்து திருமணம் செய்து கொண்டனர். வள்ளி பிறந்த மழைப் பகுதியை வள்ளி மலை என அழைத்தனர். பத்து நாட்கள் நடைபெறும் வள்ளித் திருவிழாவில் அனைத்து சுமங்கலிப் பெண்களுக்கும் திருப்புகழ் ஆசிரமத்தின் சார்பில் மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு முதலியவைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜெயின் குகைகள்
வள்ளி மலைக்கு சென்ற பின் திரும்பும் வழியில் ஜெயின் மதத்தினரின் குகைகளும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளும் அமைந்துள்ள குகைகளும் உள்ளன. அவைகள் தொல்பொருள் ஆராய்ச்சிப் மையத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வள்ளியின் தவ பீடம்
வள்ளி அமர்ந்து தவம் புரிந்த ஒரு இடம் உள்ளது. அந்த தவ பீடத்தை கிருபானந்தவாரியார் முருகனின் ஆலயத்தின் அருகில் அமைத்து உள்ளார். அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி ஒன்றும் உள்ளது. ஒவ்ஒருவரும் தன் வாழ்நாளில் ஒரு மறையாவது வள்ளி மலையில் உள்ள முருகனின் ஆலயத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என கிருபாந்தவாரியார் கூறுவது உண்டு.



More pages related to Valli, Valli Malai and Valli Malai Swamigal:
"My experience with Vallimalai Saccindananda Swami" by PS Krishna Iyer | Traditions of Valli Amma in Sri Lanka | Subrahmanya Swami Tirukkovil, Tiruttani | Vaishnavi Devi Shrine, Chennai | Kanchi Kamakoti Tiruppukazh Natyalayam | Tiruppugazh Sangamam, Chennai